தனியாருக்கு மாநகராட்சி இடமாம்: வாரி வழங்க இன்று வருது தீர்மானம்!

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
கோவை: ஐகோர்ட் உத்தரவு மற்றும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தலை மீறி, கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை தனியாருக்கு வழங்கி, தனியார் இடத்தை மாற்றம் செய்து கொள்ள, இன்றைய மாமன்ற கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஜி.கே.டி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: ஐகோர்ட் உத்தரவு மற்றும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தலை மீறி, கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை தனியாருக்கு வழங்கி, தனியார் இடத்தை மாற்றம் செய்து கொள்ள, இன்றைய மாமன்ற கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



latest tamil news




கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஜி.கே.டி., நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா பயன்பாட்டுக்கான பொது ஒதுக்கீட்டு இடம் (ரிசர்வ் சைட்) இருக்கிறது.இதற்கு அருகாமையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் கிழ புற எல்லை சீராக இல்லாமல் வளைந்து இருப்பதாகவும், பொது ஒதுக்கீட்டு இடத்தில், 2,360.50 சதுரடி நிலத்தை பரிமாற்றம் செய்தால், இரு மனைகளின் கிழ/ மேல்புற எல்லை நேர்ேகாடாக அமையும் எனவும், நில உரிமையாளர், மாநகராட்சிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.


மாமன்றத்துக்கு இன்று வருகிறது


அதையேற்று, மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை தனியாருக்கு வழங்கி, நில மாற்றம் செய்து கொள்ள, நகரமைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு முன்மொழிவு அனுப்ப, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

பொது ஒதுக்கீட்டு இடத்தை, எந்தவொரு காரணத்துக்காகவும் வேறு பணிகளுக்கு உபயோகிக்கக் கூடாது என, ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.இதேபோல், வடவள்ளி வி.என்.ஆர்., நகரில், 11 சென்ட் இடத்தை தனியாருக்கு வழங்கி விட்டு, வேறொரு பகுதியில் மாற்று இடம் பெற்றுக் கொள்ளலாம் என, மாநகராட்சி தரப்பில் முன்மொழிவு அனுப்பியபோது, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் நிராகரித்து, உத்தரவு பிறப்பித்தார்.


உத்தரவாவது...ஒன்னாவது!


ஐகோர்ட் உத்தரவு மற்றும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையரகத்தின் சுற்றறிக்கையை மீறி, மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை, தனியாருக்கு நில மாற்றம் முறையில் கொடுக்க, முன்மொழிவு அனுப்ப, தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இதனால், மாநகராட்சிக்கு எவ்வித இழப்பும் இல்லை. தனியாரிடம் இருந்து பெறப்படும் அளவுக்கேற்ற நிலத்தையே, மாற்றிக் கொடுப்பதாக, தீர்மானத்தில் காரணம் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மனுதாரர் யார், எதற்காக கேட்கிறார் என்கிற விபரத்தை வெளிப்படையாக, மன்றத்துக்கு தெரிவிக்காமலும், மனுதாரரின் கோரிக்கை மனு நகலை இணைக்காமலும், மாநகராட்சி அதிகாரிகள் மறைத்திருக்கின்றனர்.


latest tamil news




அவ்வாறு தனியாருக்கு நிலத்தை மாற்றிக் கொடுப்பதால், சம்மந்தப்பட்ட நில உரிமையாளருக்கு பயன் கிடைக்குமே தவிர, மாநகராட்சிக்கு எந்த வகையிலும் பயனில்லை. தனியாருக்கு நிலத்தை மாற்றிக் கொடுக்க ஏன் முனைப்பு காட்ட வேண்டுமென, மாமன்ற எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப், வெளிநாடு சென்றிருப்பதால், துணை கமிஷனர் ஷர்மிளா தலைமையில் இன்று மாமன்ற கூட்டம் நடக்கிறது.
அதில் தீர்மானம் நிறைவேற்ற அவசர பொருளாக, கவுன்சிலர்களுக்கு நகல் அனுப்பியிருப்பதால், சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இத்தீர்மானத்துக்கு அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் ஆட்சேபனை தெரிவித்து, கமிஷனருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.கடந்த மே மாதமும், அப்போதைய கமிஷனர் ராஜகோபால் வெளிநாடு சென்றிருந்த சமயத்தில், மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டு, ஏகப்பட்ட தீர்மானங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


எச்சரிக்கிறது சுற்றறிக்கை!


நகராட்சிகளின் நிர்வாக ஆணையரகம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'பூங்காவுக்கு ஒதுக்கிய நிலங்களை நில மாற்றம் செய்ய பரிந்துரைத்து, முன்மொழிவுகளை எந்த காரணம் கொண்டும் அனுப்ப வேண்டாம் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். சுற்றறிக்கை கிடைத்த பிறகும் முன்மொழிவுகள் அனுப்பினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-ஜூன்-202216:17:07 IST Report Abuse
Sampath Kumar உங்க ஜி தனியார்மயமாக்களின் மன்னாதி மன்னர் அவரு செய்தல் உனக்கு இனிக்கும் அடுத்தவன் செய்தால் காசுக்கும் போவியா
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
30-ஜூன்-202215:34:15 IST Report Abuse
jayvee நீதிமன்றங்களுக்கும் இதற்க்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.. நீதி ஞாயத்தை பார்த்து பயப்படாதவர்கள் நீதிமன்றத்தை பார்த்த பயப்படுவார்கள் ?
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
30-ஜூன்-202215:28:42 IST Report Abuse
Sai ஆகாதவன் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் கோணல்மாணலாக உள்ள எல்லையையை தங்கள் இடங்களை பரிவர்த்தனை செய்து எல்லையை நீறாக்கிக் கொள்வதில் தவறேதுமில்லை அவரவர் நிலப் பரப்பு குறைவுபடாது அமேரிக்கா கனடா மற்றும் பல நாடுகளின் எல்லைகளே ஒரே நேர்க்கோட்டிலுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X