ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில் பிளவு!

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடக்கிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.காங்கிரஸ், திரிணமுல், தேசியவாத காங்., சிவசேனா, சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தன் வேட்புமனுவை, கடந்த 27ல் தாக்கல்
president election 2022, Yashwant Sinha, opposition parties

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ல் நடக்கிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

காங்கிரஸ், திரிணமுல், தேசியவாத காங்., சிவசேனா, சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தன் வேட்புமனுவை, கடந்த 27ல் தாக்கல் செய்தார்.

மொத்தம் நான்கு செட் வேட்புமனுக்கள், தாக்கல் செய்யப்படுவது வழக்கம். முதல் செட் வேட்பு மனு, காங்கிரஸ் சார்பிலும், இரண்டாவது செட் வேட்பு மனு, தி.மு.க., சார்பிலும், மூன்றாவது செட் மனு, திரிணமுல் காங்., சார்பிலும், நான்காவது செட் வேட்பு மனு, சமாஜ்வாதி கட்சி சார்பிலும்தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ஒரு செட்டில் கூட, சிவசேனா மற்றும் தேசியவாத காங்., தரப்பிலிருந்து, யாரும் முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை.


latest tamil news



வேட்பு மனுதாக்கலின் போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடன் இருந்தும் கையெழுத்துப் போடவில்லை. சிவசேனா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. மேலும், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஒவைசியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகிய கட்சிகளும், வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு, ஒரு பிரதிநிதியைக் கூட அனுப்பவில்லை.

'நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்' என, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கலின்போது நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, அது உண்மையில்லை என்பது அம்பலமாகியுள்ளது.

மனுக்கள் தள்ளுபடி

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுபவர்களை, 50 எம்.பி.,க்கள்அல்லது எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிய வேண்டும். அதே போல, 50 எம்.பி.,க்கள் அல்லது எம்.எல்.ஏ.,க்கள் வழிமொழிய வேண்டும். அப்படி செய்யாத நிலையில் வேட்புமனு நிராகரிக்கப்படும். இந்த சட்டவிதியை எதிர்த்து டில்லியை சேர்ந்த மகராஜ் நவுஹாடியா என்ற சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர், 2007 முதல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து நிராகரிக்கப்பட்டுள்ளார்.இதேபோல், ஆந்திராவை சேர்ந்த டாக்டர் திருப்பதி ரெட்டி என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த இரு மனுக்களையும், நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
30-ஜூன்-202219:00:09 IST Report Abuse
spr "ஏன் எதிர் கட்சிகள் திரவுபதி முர்முக்கு போட்டியாகி இன்னொரு பழங்குடி, தலித்தை நிறுத்த வில்லை." சரியான கேள்விதான் ஒரு தலித் கிடைக்கவில்லையென்றால், இன்னொரு தகுதி வாய்ந்த பெண் அல்லது இஸ்லாமிய, கிருத்தவ சிறுபான்மையினர்தானே தேர்வு செய்யப்படுவது வழக்கம் பெண்ணாகிய மம்தாவே தேர்வு செய்தும் ஒரு பெண்ணைத் தேர்வு செய்ய மனமில்லையா அல்லது குலாம் நபி தேர்ந்தெடுத்திருக்கலாமே பழைய பாஜக பிரமுகரை தேர்வு செய்ய வேண்டிய காரணம் என்ன மம்தாவின் ஆளுமையோ அதனால்தான் எதிர்ப்போ
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
30-ஜூன்-202214:56:20 IST Report Abuse
கல்யாணராமன் சு. ஒவைசியின் முஸ்லிம் மஜ்லிஸ் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெறிவிச்சிட்டாங்க ....... ஆனா தேவே கவுடா டீம் முர்முவை ஆதரிக்கறதா சொல்லிட்டாங்க ஒண்ணு உள்ள வந்தா இன்னொண்ணு வெளியே போயிடுது...
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-ஜூன்-202212:23:16 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அப்புடியே ஒற்றுமையா இருந்துட்டாலும் அதிக வாக்கு பெற்று வந்த மாதிரிதான் ...பாவம் வீட்டுல சிவனேனு இருந்த நபரை மாலையே போட்டு நடுவுல கொடு விட்டிருக்கறாருங்க
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
30-ஜூன்-202214:07:37 IST Report Abuse
Saiஇன்னொரு வேட்ப்பாளர் எப்படி?...
Rate this:
enkeyem - sathy,இந்தியா
30-ஜூன்-202217:24:35 IST Report Abuse
enkeyemவயதான காலத்தில் நிம்மதியாக இருக்காமல் பதவிக்காக இந்த யஷ்வந்த் சின்கா பல கட்சிகளுக்கு தாவி இப்போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி கடைசியில் முக்குடைவது என்னவோ உறுதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X