தமிழக அரசை கண்டித்து ஜூலை 5ல் பா.ஜ., உண்ணாவிரதம்| Dinamalar

தமிழக அரசை கண்டித்து ஜூலை 5ல் பா.ஜ., உண்ணாவிரதம்

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
சென்னை : தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., சார்பில், ஜூலை 5ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.மத்திய அரசு, மே 21ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால், தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 8 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 6 ரூபாயும் குறைந்தது.சில நாட்களுக்கு முன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை
BJP,Bharatiya Janata Party

சென்னை : தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., சார்பில், ஜூலை 5ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

மத்திய அரசு, மே 21ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால், தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 8 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 6 ரூபாயும் குறைந்தது.

சில நாட்களுக்கு முன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில், மாவட்டங்கள் தோறும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்; அதையும் ஏற்கவில்லை எனில் திருச்சியில், 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும்' என்றார்.

தமிழக அரசு, இதுவரை பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில் கட்சியின் அமைப்பு ரீதியாக, 60 மாவட்டங்களிலும், ஜூலை 5ம் தேதி காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X