150 அடி உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நாகர்கோவில் : கன்னியாகுமரியில், 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி நேற்று முதல் பறக்க விடப்பட்டது.அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் விஜயகுமார், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, இதற்கான பணிகளை துவக்கினார். பல்வேறு காரணங்களால் இடம் மாற்றப்பட்டு, நான்கு வழி சாலையில், மகாதானபுரம் ரவுண்டானாவில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதில், 32 அடி
150 அடி உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி

நாகர்கோவில் : கன்னியாகுமரியில், 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி நேற்று முதல் பறக்க விடப்பட்டது.

அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் விஜயகுமார், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, இதற்கான பணிகளை துவக்கினார். பல்வேறு காரணங்களால் இடம் மாற்றப்பட்டு, நான்கு வழி சாலையில், மகாதானபுரம் ரவுண்டானாவில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.

அதில், 32 அடி உயரம், 48அடி நீளம் அகலம் கொண்ட தேசிய கொடியை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஏற்றினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இரவு, பகல் 24 மணி நேரமும் இந்தக் கொடி பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவிலும் கொடியை பார்க்கும் வகையில் மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
30-ஜூன்-202211:02:43 IST Report Abuse
ديفيد رافائيل இந்திய தேசிய கொடி மாலை ஆறு மணிக்கு மேல் பறக்க விடக்கூடாது என்று நான் கேள்விப்பட்டு இருக்கேன் dinamalar news மூலம்.
Rate this:
Cancel
Natarajan Kandasamy - Erode,இந்தியா
30-ஜூன்-202210:34:56 IST Report Abuse
Natarajan Kandasamy தங்கத்தில் செய்த கொடி கம்பத்தை பாதுகாக்க உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தமும் தயாரா?
Rate this:
Cancel
ramesh - Hosur,இந்தியா
30-ஜூன்-202209:23:25 IST Report Abuse
ramesh 25 லட்ச்சமே அதிகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X