மாலை போட்டதால் கடுப்பு: மன்னிப்பு கேட்டார் பழனிசாமி

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: மாலை போட்டதால் கடுப்பான அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அதற்காக, 'மாஜி' அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.சமீபத்தில், சென்னை வானகரத்தில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பழனிசாமிக்கு பொதுச்செயலர் பதவி வழங்க திட்டமிடப்பட்டது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கால், பொதுச்செயலர் பதவி அறிவிப்பை வெளியிட முடியாமல் போனது. இதன்
மாலை போட்டதால் கடுப்பு: மன்னிப்பு கேட்டார் பழனிசாமி

சென்னை: மாலை போட்டதால் கடுப்பான அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அதற்காக, 'மாஜி' அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமீபத்தில், சென்னை வானகரத்தில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பழனிசாமிக்கு பொதுச்செயலர் பதவி வழங்க திட்டமிடப்பட்டது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கால், பொதுச்செயலர் பதவி அறிவிப்பை வெளியிட முடியாமல் போனது. இதன் காரணமாக மன வருத்தத்தில் பழனிசாமி இருந்தார். அவைத் தலைவர் தேர்வு தொடர்பான தீர்மானத்தை வரவேற்க, பழனிசாமி பேசுவதற்கு எழுந்தார். அப்போது, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலர் என்ற முறையில், பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆளுயர பன்னீர் ரோஜா மாலையை அணிவிக்க முயன்றனர்.

இதனால் கடுப்பான பழனிசாமி, மேடையிலேயே, 'மாஜி' அமைச்சரை கடிந்து கொண்டார்; அங்கிருந்து விரட்டினார். அதிருப்தி அடைந்த பெஞ்சமின் மற்றும் ஆதரவாளர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், பொதுக்குழு முடிந்ததும், பெஞ்சமினை அழைத்து வர செய்து, இரண்டு கைகளையும் பிடித்து, பழனிசாமி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த புகைப்படத்தை, 'மாஜி' ஆதரவாளர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202216:46:26 IST Report Abuse
Easwar Kamal யாரு இவரு கோப படறாரு மாலை போட்டதுக்கு. மாலை வாங்கி வர காசு கொடுத்ததே நாம பழனிச்சாமி அன்னத்தை இது கூட தெரியலையா.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
30-ஜூன்-202215:18:43 IST Report Abuse
abibabegum கட்சியே விட்டு வெளியே போய்விடக்கூடாது போய்ட்டே நீ தன்மான சிங்கம் இப்போ அவமான சிங்கம்
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
30-ஜூன்-202213:49:16 IST Report Abuse
Barakat Ali மிகவும் கனமான மாலை அது... யாருக்குமே கோபம் வரத்தான் செய்யும்... இதை யோசிக்காமல் இங்கே எடப்பாடியாரை இகழ்ந்து பேசியுள்ளனர் சில்லுண்டிகள் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X