சமூக வலைதள நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி கெடு

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை நிறைவேற்ற, 'டுவிட்டர்' சமூக வலை தள நிறுவனத்துக்கு மத்திய அரசு, ஜூலை 4ம் தேதி வரை இறுதி கெடு விதித்துள்ளது.சமூக வலைதளங்கள், இணைய பொழுதுபோக்கு தளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதி, அரசு அமைப்புகள் ஆட்சேபிக்கும் பதிவுகளை
சமூக வலைதளம், ட்விட்டர், மத்திய அரசு, இறுதி கெடு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை நிறைவேற்ற, 'டுவிட்டர்' சமூக வலை தள நிறுவனத்துக்கு மத்திய அரசு, ஜூலை 4ம் தேதி வரை இறுதி கெடு விதித்துள்ளது.

சமூக வலைதளங்கள், இணைய பொழுதுபோக்கு தளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதி, அரசு அமைப்புகள் ஆட்சேபிக்கும் பதிவுகளை நீக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

இதை நிறைவேற்ற சமூக வலை தளங்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன; அதன்பிறகு ஏற்றன. ஆனால், டுவிட்டர் நிறுவனம் மட்டும் மத்திய அரசின் பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றவில்லை.இதையடுத்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்ற, ஜூலை, 4ம் தேதி வரை கடைசி வாய்ப்பு தருவதாக, டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.


latest tamil news




தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, பயனாளிகள் பதிவிடும் பதிவுகளுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அதே நேரத்தில், அரசின் கட்டுப்பாடுகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு, இந்த விலக்கு ரத்து செய்யப்படும். இதன்பிறகு, இந்த தளத்தில் வெளியிடப்படும் அனைத்து பதிவுகளுக்கும் நிறுவனமே பொறுப்பாகும். ஆட்சேபகரமான பதிவுகள் இருந்தால், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
30-ஜூன்-202215:38:46 IST Report Abuse
jayvee சோசியல் மீடியாக்களை தடை செய்தால் நீதிமன்றங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.. என்னவோ சோசியல் மீடியா இல்லையென்றால் மக்கள் இறந்துவிடுவார்கள் போலும் .
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
30-ஜூன்-202212:01:55 IST Report Abuse
தமிழன் இதுக்கெல்லாம் சீனாகாரன் தான் கரெக்டு.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
30-ஜூன்-202211:12:57 IST Report Abuse
Aarkay அரசின் விதிமுறைகளை ஏற்காத நிறுவனங்கள் இங்கு இயங்க வேண்டிய அவசியமில்லை. அவற்றை தாராளமாய் தடை செய்யலாம். மேற்கத்திய நாடுகளோ, இடது சாரிகளோ, நம் கருத்து சுதந்திரத்துக்கு நற்சான்று பத்திரம் வழங்கவேண்டிய அவசியமில்லை. நம் பாதுகாப்பே நமக்கு முக்கியம். அந்நிய கைக்கூலிகளுடன் இணைந்து, அதற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்த செயலும் சுதந்திரம் என்ற போர்வையில் நிகழ அனுமதியோம். மூளைச்சலவை செய்யவே இந்த சக்திகளின் கருத்து சுதந்திரம் பெரும்பாலும் துணை போகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X