சமூக வலைதள நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி கெடு| Dinamalar

சமூக வலைதள நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி கெடு

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (4) | |
புதுடில்லி : இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை நிறைவேற்ற, 'டுவிட்டர்' சமூக வலை தள நிறுவனத்துக்கு மத்திய அரசு, ஜூலை 4ம் தேதி வரை இறுதி கெடு விதித்துள்ளது.சமூக வலைதளங்கள், இணைய பொழுதுபோக்கு தளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதி, அரசு அமைப்புகள் ஆட்சேபிக்கும் பதிவுகளை
சமூக வலைதளம், ட்விட்டர், மத்திய அரசு, இறுதி கெடு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை நிறைவேற்ற, 'டுவிட்டர்' சமூக வலை தள நிறுவனத்துக்கு மத்திய அரசு, ஜூலை 4ம் தேதி வரை இறுதி கெடு விதித்துள்ளது.

சமூக வலைதளங்கள், இணைய பொழுதுபோக்கு தளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதி, அரசு அமைப்புகள் ஆட்சேபிக்கும் பதிவுகளை நீக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

இதை நிறைவேற்ற சமூக வலை தளங்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன; அதன்பிறகு ஏற்றன. ஆனால், டுவிட்டர் நிறுவனம் மட்டும் மத்திய அரசின் பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றவில்லை.இதையடுத்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்ற, ஜூலை, 4ம் தேதி வரை கடைசி வாய்ப்பு தருவதாக, டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.


latest tamil news




தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, பயனாளிகள் பதிவிடும் பதிவுகளுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அதே நேரத்தில், அரசின் கட்டுப்பாடுகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு, இந்த விலக்கு ரத்து செய்யப்படும். இதன்பிறகு, இந்த தளத்தில் வெளியிடப்படும் அனைத்து பதிவுகளுக்கும் நிறுவனமே பொறுப்பாகும். ஆட்சேபகரமான பதிவுகள் இருந்தால், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X