இயற்கை சாயமேற்றிய பட்டு பின்னலாடை: சோதனை முயற்சி வெற்றி பெறுமா?

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்: இயற்கை சாயமேற்றிய பட்டு பின்னலாடை ரகங்களை உருவாக்கும் சோதனை முயற்சியில், திருப்பூர் அடல் இன்குபேஷன் மையம் தீவிரம் காட்டி வருகிறது.திருப்பூர், முதலிபாளையத்தில் செயல்பட்டு வரும் அடல் இன்குபேஷன் மையம், இயற்கை சாயமேற்றப்பட்ட பட்டு பின்னலாடை ரகங்கள் தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. பட்டு நுாலிழையில், நவீன நிட்டிங் மெஷினை பயன்படுத்தி, துணி

திருப்பூர்: இயற்கை சாயமேற்றிய பட்டு பின்னலாடை ரகங்களை உருவாக்கும் சோதனை முயற்சியில், திருப்பூர் அடல் இன்குபேஷன் மையம் தீவிரம் காட்டி வருகிறது.

திருப்பூர், முதலிபாளையத்தில் செயல்பட்டு வரும் அடல் இன்குபேஷன் மையம், இயற்கை சாயமேற்றப்பட்ட பட்டு பின்னலாடை ரகங்கள் தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. பட்டு நுாலிழையில், நவீன நிட்டிங் மெஷினை பயன்படுத்தி, துணி தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது:
'வன்யா சில்க்' எனப்படும் எரி பட்டு நுாலிழையை பயன்படுத்தி பின்னல் துணி தயாரிக்கிறோம். இவை பார்ப்பதற்கு பருத்தி ஆடை போன்ற தோற்றம் அளிக்கின்றன. கோல்கத்தாவிலிருந்து எரி பட்டு இழை தருவிக்கப்பட்டு, திருப்பூரில் உள்ள நிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பட்டு பின்னல் துணி தயாரிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




பட்டு துணிக்கு இயற்கை சாயமேற்றுவது சவால் நிறைந்தது. பாம்பே டெக்ஸ்டைல் ரிசர்ச் அசோசியேஷன் (பிட்ரா) வல்லுனர்கள், பட்டு துணிக்கு சாயமேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர்.பட்டு பின்னல் துணிக்கு ஏழுவகை இயற்கை சாயமேற்றமுடிகிறது.முதல்கட்டமாக, பட்டு பின்னல் துணியில் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடை ரகங்களை தயாரித்துள்ளோம். வர்த்தக ரீதியாக வெற்றிபெறச்செய்வதற்கு, சில பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

சலவை, உராய்தல் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மூலம், இயற்கை சாயமேற்றிய பட்டு பின்னலாடையிலிருந்து, எளிதில் சாயம் போகிறதா என்பதை உறுதி செய்வது அவசியமாகிறது. இதற்காக டெக்ஸ்டைல் கமிட்டியின் ஆய்வகத்துக்கு, ஆடை மாதிரிகளை அனுப்பியுள்ளோம்.

இயற்கை சாயமேற்றிய பட்டு பின்னலாடைகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். குறிப்பாக அமெரிக்காவில், இயற்கை சாயமேற்றிய பட்டு, பருத்தி இழை குழந்தைகள் ஆடைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.சோதனை முயற்சி வெற்றிபெற்றவுடன், 'ஸ்டார்ட் அப்'பில் ஆர்வம் உள்ள தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தி, இயற்கை சாயமேற்றிய பட்டு பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

இயற்கை சாயமேற்றிய பட்டு பின்னலாடைகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். குறிப்பாக அமெரிக்காவில், இயற்கை சாயமேற்றிய பட்டு, பருத்தி இழை குழந்தைகள் ஆடைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
30-ஜூன்-202212:59:43 IST Report Abuse
Manguni வாழ்த்துக்கள் ... 'நூற்பு' கைத்தறி மையம் இதை ஏற்கனவே செய்து வருகிறது. அவைகளை ஒரு பெட்டி எடுத்து போடலாமே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X