குன்னுார்: குன்னுார் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது.
கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.கவுன்சிலர் சாந்தா : கான்வென்ட் சாலையில், வாகனங்கள் நிறுத்துவதால், குழந்தைகள் நடமாடவும், இறந்தவர்களை மயானத்துக்கு எடுத்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது.வசந்தா : வார்டுகளுக்கு குப்பை எடுக்க, 3 பேர் அனுப்புவதாக கூறி ஒருவரை அனுப்புகின்றனர். இதனால், பணிகள் முழுமை பெறுவதில்லை.சரவணன் : பிறப்பு, இறப்பு பதிவுகள் குறித்து அஜெண்டாவில் பதிவதில்லை.
'சிலேட்டர் ஹவுஸ்' சுகாதாரமின்றி உள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது.உமாராணி : 'நான்கு மாதமாக கழிவுநீர், நடைபாதை பிரச்னைகள் குறித்து தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,' என, தெரிவித்து தரையில் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தார்.ராஜ்குமார் : குடிநீரில் சாக்கடை நீர் கலப்பது தொடர்பாக, 3 மாதங்களாக தெரிவித்தும் தீர்வு காணாமல் உள்ளதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.ஆரோக்கியதாஸ் : ஓட்டுப்பட்டறையில் தடுப்பு சுவர் எழுப்பாமல் ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்படும்.கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''30 வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.