ஆன்லைன் சூதாட்டம் தடுக்க விரைவில் சட்ட திருத்தம்: ரகுபதி| Dinamalar

ஆன்லைன் சூதாட்டம் தடுக்க விரைவில் சட்ட திருத்தம்: ரகுபதி

Added : ஜூன் 30, 2022 | |
புதுக்கோட்டை: ''ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட திருத்தத்தை, தமிழக முதல்வர் உரிய முறையில் மேற்கொள்வார்,'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பிளஸ் 2 படித்த மாணவ - மாணவியருக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயிற்சியை தொடங்கி

புதுக்கோட்டை: ''ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட திருத்தத்தை, தமிழக முதல்வர் உரிய முறையில் மேற்கொள்வார்,'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பிளஸ் 2 படித்த மாணவ - மாணவியருக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயிற்சியை தொடங்கி வைத்தார்.அதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சிறைகளில் உள்ள சிறப்பு முகாம்கள் அனைத்தும் வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளன;

சிறைத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் தான், சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். சிறப்பு முகாமில் உள்ளவர்கள் சுதந்திரமாகத் தான் உள்ளனர்.சிறப்பு முகாம்களில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதை தடுப்பதற்காக, உளவியல் ரீதியான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.மேலும், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட திருத்தத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய முறையில் மேற்கொள்வார்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X