அமைச்சர் அனிதாவுக்கு எதிரானஅமலாக்க பிரிவு வழக்குக்கு தடை

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான, அமலாக்கப் பிரிவு வழக்குக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2001 - 06ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, வீட்டுவசதித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். தி.மு.க., 2006ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான, அமலாக்கப் பிரிவு வழக்குக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2001 - 06ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, வீட்டுவசதித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். தி.மு.க., 2006ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கில் விசாரணை நடந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கப் பிரிவு தனியாக வழக்குப் பதிவு செய்தது.

அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கை ரத்து செய்யவும், சொத்து முடக்கத்தை நீக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாயா, ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.டி.அசோக்குமார் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க, அமலாக்கப் பிரிவு சார்பில் அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து, விசாரணையை ஜூலை 14க்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை அமலாக்கப்பிரிவு பதிவு செய்த வழக்குக்கு இடைக்கால தடை விதித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X