உடையும் ஆவின் பால் பாக்கெட்கள்; இழப்புக்குள்ளாகும் ஏஜென்ட்கள்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
கோவையில் வினியோகிக்கப்படும் 'ஆவின்' பால் பாக்கெட்கள் அதிகளவில் உடைந்து பால் 'லீக்' ஆவதால், பெரும் இழப்பு ஏற்படுவதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.கோவை ஆவினில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக, சமீபத்தில் மூன்று பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அதிகாரிகள் மீது விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒப்பந்தப்படி, தொழில்நுட்ப

கோவையில் வினியோகிக்கப்படும் 'ஆவின்' பால் பாக்கெட்கள் அதிகளவில் உடைந்து பால் 'லீக்' ஆவதால், பெரும் இழப்பு ஏற்படுவதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கோவை ஆவினில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக, சமீபத்தில் மூன்று பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அதிகாரிகள் மீது விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒப்பந்தப்படி, தொழில்நுட்ப ரீதியிலான பணி நடக்காததால், பால் பாக்கெட்கள் உடைந்து லீக் ஆகி, தங்களுக்கு நஷ்டமாவதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் கோவையில் வினியோகிக்கப்பட்ட ஏராளமான பால் பாக்கெட்கள், உடைந்து லீக் ஆகியதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக மேட்டுப்பாளையம், சிறுமுகை, கோவை, ஆர்.எஸ்.புரம், சுந்தரேசன் லே-அவுட் ஆகிய பகுதிகளில் இந்த பிரச்னை அதிகளவில் இருந்துள்ளது.ஒரு பால் முகவருக்கு வினியோகிக்கப்பட்ட 150 லிட்டர் பாலில், 25 - ஒரு லிட்டர் பால் பாக்கெட்கள் உடைந்து ஒழுகிய நிலையில் இருந்துள்ளன. இந்த பால் பாக்கெட்களை விற்றால், ஒரு லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் வீதமாக பால் முகவர்களுக்கும், சில்லறை வணிகர்களுக்கும் 37 ரூபாய் 50 பைசா மட்டுமே லாபம் கிடைக்கும்.

ஆனால் மொத்த பாக்கெட்களும் லீக் ஆனதால், 1,200 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.உடைந்த 'டப்'களில் பால் பாக்கெட்கள் அடுக்கப்படுவதால், பால் பாக்கெட்கள் கிழிந்து, முற்றிலும் ஒழுகி, வெறும் கவர் மட்டுமே இருப்பதாக பால் முகவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பண்ணையில் பால் டப்புகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில ஒப்பந்தப்பணிகள், தகுதி அடிப்படையில் இல்லாமல், ஆவின் நிர்வாகப் பிரிவிலுள்ள ஒரு பெண்ணின் உறவினருக்குத் தரப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அதேபோல, கோவை ஆவினில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இன்ஜினியராகப் பணியாற்றும் ஒருவர், தன் உறவினர் ஒருவரை பினாமியாக வைத்து, கான்ட்ராக்ட் எடுப்பதால்தான், பணிகள் தரமின்றி நடப்பதாகவும், பால் பாக்கெட்கள் உடைய காரணமென்றும் பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள் புகார் கூறுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, முதல்வருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் புகார் அனுப்பி உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X