'போன் பே', வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
திருப்பூர் : 'போன் பே' மூலம் அனுப்பிய தொகை உரிய கணக்கில் சேரவில்லை. 'போன் பே' மற்றும் வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 35. இவரது வங்கி கணக்கு திருப்பூர் ஸ்டேட் வங்கியில் உள்ளது. 2017 ஜன., 3ம் தேதி இவர் 'போன் பே' செயலி மூலம் நண்பருக்கு பணம் அனுப்பினார்.திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின்
'போன் பே', வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருப்பூர் : 'போன் பே' மூலம் அனுப்பிய தொகை உரிய கணக்கில் சேரவில்லை. 'போன் பே' மற்றும் வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 35. இவரது வங்கி கணக்கு திருப்பூர் ஸ்டேட் வங்கியில் உள்ளது. 2017 ஜன., 3ம் தேதி இவர் 'போன் பே' செயலி மூலம் நண்பருக்கு பணம் அனுப்பினார்.திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் பாங்க் ஆப் பரோடா வங்கிகணக்குக்கு அந்த பணம் அனுப்பப்பட்டது.

முதலில் 5,000 ரூபாய் அனுப்பியுள்ளார். அது அவர் கணக்கில் சேர்ந்தது. அடுத்து 9,500 ரூபாய் அனுப்ப, வங்கி கணக்கில் சேரவில்லை. அடுத்த நாள் மீண்டும் அனுப்பிய 9,500 ரூபாய் சேர்ந்து விட்டது.முதல் நாள் அனுப்பிய தொகை குறித்து பெங்களூருவில் உள்ள, 'போன் பே' நிறுவனம் மற்றும் ஸ்டேட் வங்கிக்கு புகார் அனுப்பினார்.

பல முறை தொடர்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.கடந்த 2019 ஜூலை 26ம் தேதி, செந்தில்குமார்,திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர், 'கணக்கில் மாற்றிய வகையில் வரவேண்டிய தொகை ரூபாய் 9,500 உடன், அவருக்கு மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்கு 5,000 ரூபாய் என மொத்தம்

ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து 500 ரூபாயை, வழக்கு தொடுத்த நாள் முதல், 12 சதவீதம் வட்டியுடன் சேர்த்து 'போன் பே' மற்றும் ஸ்டேட் வங்கி வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X