ஜனாதிபதி தேர்தல்: 12ல் சென்னை வருகிறது ஓட்டுப்பெட்டி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் அடுத்த மாதம் 25ம் தேதி நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக ஜூலை 18ல் தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டளிப்பதற்கு வசதியாக டில்லியில் இருந்து ஓட்டுப் பெட்டி ஜூலை 12ல் சென்னை வர உள்ளது. தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர்

சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் அடுத்த மாதம் 25ம் தேதி நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக ஜூலை 18ல் தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டளிப்பதற்கு வசதியாக டில்லியில் இருந்து ஓட்டுப் பெட்டி ஜூலை 12ல் சென்னை வர உள்ளது.

தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இருவரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சிகளின் தலைவர்கள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ.க்கள் 39 லோக்சபா எம்.பி.க்கள் 18 ராஜ்யசபா எம்.பி.க்கள் உள்ளனர்.

இவர்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக டில்லியில் இருந்து ஓட்டுப் பெட்டி ஜூலை 12ல் சென்னை வர உள்ளது. மாற்று பெட்டி ஒன்று வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு ஓட்டுப் பெட்டி வரவழைக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படாது. ஓட்டுச்சீட்டில் எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் ஓட்டளிப்பர். எம்.பி.க்கள் டில்லியிலும் ஓட்டளிக்கலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X