கொடுக்க வேண்டியதை கொடுத்து காரியத்தை முடிச்சிருப்பாங்க!| Dinamalar

'கொடுக்க வேண்டியதை கொடுத்து' காரியத்தை முடிச்சிருப்பாங்க!

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (9) | |
மா.கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி:அ.தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தி.மு.க., அரசு கூறியது. ஊழல் தடுப்பு துறையினர் இதுபற்றி விசாரித்து நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 10 உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய, அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசு காலதாமதம் செய்கிறது.'நடவடிக்கை எடுப்போம்' என இவங்க பூச்சாண்டி
கே_பாலகிருஷ்ணன், தினகரன்

மா.கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி:அ.தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தி.மு.க., அரசு கூறியது. ஊழல் தடுப்பு துறையினர் இதுபற்றி விசாரித்து நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 10 உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய, அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசு காலதாமதம் செய்கிறது.

'நடவடிக்கை எடுப்போம்' என இவங்க பூச்சாண்டி காட்டிஇருப்பாங்க... அவங்களும் பயந்து, 'கொடுக்க வேண்டியதை கொடுத்து' காரியத்தை முடிச்சிருப்பாங்க!


தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சென்னை முழுதும் பாதுகாப்பு இல்லாமல், உரிய நேரத்தில் முடிக்காமல், ஆபத்தை விளைவிக்கும் வகையில், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், மக்களுக்கு ஏற்படும் இழப்புகள், உயிரிழப்புகள் அனைத்துக்கும், அரசு, மாநகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். இவை அனைத்துக்கும் காரணம், முறையற்ற நிர்வாகம், முறைகேடுகள், லஞ்சம் மற்றும் ஊழல். நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

ஏதாவது அசம்பாவிதம் நடந்தா தானே, அரசு இயந்திரத்தின் துாக்கம் கலையும் என்பது தங்களுக்கு தெரியாதா?


அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: பழனிசாமி ஆட்சியில், மீன்வளத் துறை சார்பாக, மீனவர்களுக்கு, 'வாக்கி டாக்கி' வாங்கியதில், கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, தி.மு.க., அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மவுனம் காப்பது ஏன்? அப்படி என்றால், தி.மு.க.,வும், முதல்வர் ஸ்டாலினும், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றத்தான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தனரோ?


latest tamil newsஒரு தப்பை, இப்ப ஒருத்தர் செஞ்சிட்டு இருக்கிறப்ப, அதே தப்பை, அவருக்கு முந்தி இருந்தவர் செஞ்சிருந்தால், அவர் மேல நடவடிக்கை எடுப்பாரா... மனசாட்சி குத்துமில்லையா?


மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மவுரியா அறிக்கை: தமிழகத்தில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைக்காகக் காத்திருக்கும் போது, மிகக் குறைந்த சம்பளத்தில், தற்காலிக அடிப்படையில், ஆசிரியர் நியமனம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

தகுதி தேர்வில் ஜெயிச்சவங்களுக்கு ஆசிரியர் வேலை குடுத்தா, தம்பிடி காசு தேறுமா...? தற்காலிக நியமனங்கள்ல தானே, வட்டம், குட்டம், மாவட்டம்னு, 'அள்ள' முடியும்!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சேலத்தில் விற்கப்பட்டு வருவதை, ஊடகங்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளன. தமிழகத்தில், 2003-ம் ஆண்டே லாட்டரி தடை செய்யப்பட்டு விட்டது. அதை முழுமையாக செயல்படுத்த வேண்டும். லாட்டரி விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, ஏழைக் குடும்பங்கள் வீதிக்கு வருவதை தடுக்க வேண்டும்.

லாட்டரி அதிபர்கள் பலர், இந்த ஆட்சி வருவதற்கு நிதி ஆதாரங்களை அள்ளி விட்டதாக, தேர்தல் சமயத்தில் பேசப்பட்டது... அது நிஜம் என்பது தற்போது புரிகிறது!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X