சாலை விபத்தில் மகள் கண்முன் தலைமை ஆசிரியை பரிதாப பலி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சாலை விபத்தில் மகள் கண் முன்னே தலைமை ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பழனியப்பர் கோவில் ரோட்டைச் சேர்ந்த முருகேசன் மனைவி காந்திமதி, 55. இவருக்கு மீனா, 28, சௌந்தர்யா, 26, என்ற இரு மகள்கள் உள்ளனர். காந்திமதி மேலப்பட்டி அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை மகள் மீனாவுடன், காந்திமதி சேலம் மருத்துவமனைக்கு தனது டூ


சாலை விபத்தில் மகள் கண் முன்னே தலைமை ஆசிரியை பரிதாபமாக
உயிரிழந்தார்.
ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பழனியப்பர் கோவில் ரோட்டைச் சேர்ந்த முருகேசன் மனைவி காந்திமதி, 55. இவருக்கு மீனா, 28, சௌந்தர்யா, 26, என்ற இரு மகள்கள் உள்ளனர். காந்திமதி மேலப்பட்டி அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை மகள் மீனாவுடன், காந்திமதி சேலம் மருத்துவமனைக்கு தனது டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். ராசிபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26, தனது டூவீலரில் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ராசிபுரம் புதிய நீதிமன்ற வளாகம் அருகே, எதிர்பாராதவிதமாக, இரு டூவீலர்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த காந்திமதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மீனாவுக்கு சிறு காயங்களும், சந்தோஷ் குமார் காலும் உடைந்தது. சந்தோஷ்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து ராசிபுரம் போலீசார்
விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X