இந்திய கடல் உணவுகள் விரும்பி வாங்கும் அமெரிக்கா

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை: கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், 57 ஆயிரத்து 586 கோடி ரூபாய் மதிப்பிலான, 137 கோடி கிலோ கடல் உணவுகள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின், மண்டல துணை இயக்குனர் அன்சார் அலி வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், 57 ஆயிரத்து 586 கோடி ரூபாய் மதிப்பிலான, 136.92 கோடி கிலோ கடல் உணவுகள்,

சென்னை: கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், 57 ஆயிரத்து 586 கோடி ரூபாய் மதிப்பிலான, 137 கோடி கிலோ கடல் உணவுகள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின், மண்டல துணை இயக்குனர் அன்சார் அலி வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், 57 ஆயிரத்து 586 கோடி ரூபாய் மதிப்பிலான, 136.92 கோடி கிலோ கடல் உணவுகள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.கொரோனா காலத்திலும், ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தில் 31.71 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளோம். எடையின் அடிப்படையில், 19.12 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உறைய வைக்கப்பட்ட இறால்களின் ஏற்றுமதி, பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் சீனா, அதிகளவு இந்திய கடல் உணவுகளை இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன.ஒட்டுமொத்த ஏற்றுமதியில், 42 ஆயிரத்து 706 கோடி ரூபாய் மதிப்பில், 72.81 கோடி கிலோ உறைய வைக்கப்பட்ட இறால்கள், ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இதில், அதிகபட்சமாக அமெரிக்கா 34.25 கோடி கிலோ இறால்களையும், சீனா 12.56 கோடி கிலோ இறால்களையும் இறக்குமதி செய்துள்ளன. தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், தென் கிழக்கு ஆசியா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகள் இறால் இறக்குமதி செய்துஉள்ளன. இது தவிர, இதர உறைய வைக்கப்பட்ட மீன் வகைகள், உலர வைக்கப்பட்ட உணவுப் பொருட்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X