கோனேரிப்பட்டியில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கோனேரிப்பட்டி பருத்தி விற்பனை சேவை மையத்தில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்த, 750 மூட்டை பருத்தி, 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க சேவை மையம், கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ளது. இங்கு நேற்று பருத்தி விற்பனை நடந்தது. நெடுங்குளம், கல்வடங்கம்,


சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கோனேரிப்பட்டி பருத்தி விற்பனை சேவை மையத்தில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்த, 750 மூட்டை பருத்தி, 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க சேவை மையம், கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ளது. இங்கு நேற்று பருத்தி விற்பனை நடந்தது. நெடுங்குளம், கல்வடங்கம், பொன்னம்பாளையம், பூமணியூர், பூதப்பாடி, காவேரிபட்டி, கொட்டாயூர், தேவூர், கோனேரிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 160 விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், 750 பருத்தி மூட்டைகளை ஏலம் கேட்டனர். பி.டி., ரகப் பருத்தி குவிண்டால், 7,669 ரூபாய் முதல், 9,499 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X