திருப்பூரில் பயங்கரம்: ரியல் எஸ்டேட் வர்த்தகர் வெட்டி கொலை| Dinamalar

திருப்பூரில் பயங்கரம்: ரியல் எஸ்டேட் வர்த்தகர் வெட்டி கொலை

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
திருப்பூர்: திருப்பூரில், 'ரியல் ஸ்டேட்' வர்த்தகரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்; கொலையாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ, பவர் கார்டனை சேர்ந்தவர் அப்புக்குட்டி; ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அதேபகுதியில், 30க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.இவரது மகன் பாலசுப்பிரமணியம், 31.
திருப்பூரில் பயங்கரம்: ரியல் எஸ்டேட் வர்த்தகர் வெட்டி கொலை

திருப்பூர்: திருப்பூரில், 'ரியல் ஸ்டேட்' வர்த்தகரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்; கொலையாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ, பவர் கார்டனை சேர்ந்தவர் அப்புக்குட்டி; ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அதேபகுதியில், 30க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.இவரது மகன் பாலசுப்பிரமணியம், 31. தந்தையின் தொழிலுக்கு உதவியாகவும், பங்குச்சந்தையிலும் ஈடுபட்டு வந்தார்.

திருமணமான இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று மனைவியைப் பிரிந்தார். நேற்று முன்தினம், பெற்றோர் பழநி சென்றுள்ளனர். நேற்று அதிகாலை கேட் மற்றும் வீட்டு கதவு திறந்து கிடப்பதாக அருகே வசிப்பவர்கள், அப்புக்குட்டிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திரும்பிய பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியம் கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ஊத்துக்குளி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். பாலசுப்பிரமணியத்தின் வயிறு, கழுத்து பகுதியில் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு, எஸ்.பி., செஷாங் சாய் விசாரணை நடத்தினார்.

போலீசார் கூறுகையில், 'பாலசுப்பிரமணியம் தனியாக வீட்டில் இருந்தார். வீட்டுக்குள் இருந்த பணம், நகை, அவரது மொபைல் போன் உள்ளிட்ட எந்த பொருளும் திருடு போகவில்லை. டூவீலர் மாயமாகி உள்ளது. 'இரவில் டூவீலரில், இருவர் சந்தேகப்படும் விதமாக சென்று வந்துள்ளனர். பாலசுப்பிரமணியம் பங்குச்சந்தையில் சில லட்சங்களை இழந்துள்ளார். 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடக்கிறது' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X