போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே விவசாயத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கிடையே போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரம்
போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே விவசாயத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கிடையே போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27ம் தேதி நேரடி நெல் விதைப்பு பணியை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பருத்திக்குடி கிராமத்தில் 7 விவசாயிகள் இன்று 13 ஏக்கர் நிலத்தில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயிகள் முடிவு செய்தனர். போலீசார் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144(3)ன்படி மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் ஏடிஎஸ்பி தங்கவேல் தலைமையில் 3 டிஎஸ்பிகள், 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 150 போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனையடுத்து காலை 9 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் தங்கள் வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
30-ஜூன்-202216:53:44 IST Report Abuse
jayvee இதுதான் கேரளா மாடல் கம்யூனிஸ்ட்.. அங்கு கூலித்தொழிலாளர்களுக்கு மூட்டை ஏற்றி இறக்குதல் செய்யாவிட்டாலும், நிறுவங்கள் தங்கள் தொழிலாளர்களை வைத்து அந்த வேலையை செய்தலும், கம்யூனிஸ்ட் ரௌடிகளுக்கு கூலி கொடுக்கவேண்டும்.. இதையே பாண்டியில் VCK ரௌடிகள் செய்கிறார்கள் .. சென்னை ரிட்சி ஸ்ட்ரீட்டிலும் இவர்கள் இதையேதான் செய்கிறார்கள் .. கூலி அவர்கள் வைத்ததுதான்.. வேலை செய்யும் நேரம் அவர்கள் இஷ்டப்படிதான்..
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
30-ஜூன்-202216:11:33 IST Report Abuse
ponssasi ஒருபுறம் விவசாய கூலிக்கு ஆட்கள் வருவதில்லை, அப்படியே வந்தாலும் உணவு போக்குவரத்து என்று அவர்கள் கேட்கும் கூலி கொடுத்து விவசாயி லாபம் பார்க்க முடியாது. எதற்கெடுத்தாலும் தொழிலார்கள் என்று கொடிபிடிக்கும் கம்யூனிஸ்ட் அவர்கள் வாங்கும் கூலிக்கு வேலைசெய்யவேண்டும் என்று ஏன் போராடுவதில்லை, ஒரு நபர் செய்யவேண்டிய ஒருநாள் வேலையை இரண்டு பேருக்கு பகிர்ந்து இரண்டு நாட்களுக்கு செய்யவேண்டியது. நாடு இப்படியே போனால் நெல் விதைப்புக்கு மட்டுமல்ல விளைந்த அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க போலீஸ் காவல் போடவேண்டும், இந்தியாவில் உணவு பஞ்சம் தவிர்க்கமுடியாது என்றாகிவிடும்.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
30-ஜூன்-202215:24:35 IST Report Abuse
Rpalnivelu தரித்திரத்தின் பிறப்பிடம் கம்யூனிஸ்டுகள். ஆமை/ அமீனா/ திருட்டு கம்மிகள் புகுந்த இடம் உருப்படாது, உறுபடவே உருப்படாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X