போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு| Dinamalar

போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (11) | |
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே விவசாயத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கிடையே போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரம்
போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே விவசாயத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கிடையே போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27ம் தேதி நேரடி நெல் விதைப்பு பணியை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பருத்திக்குடி கிராமத்தில் 7 விவசாயிகள் இன்று 13 ஏக்கர் நிலத்தில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயிகள் முடிவு செய்தனர். போலீசார் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144(3)ன்படி மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் ஏடிஎஸ்பி தங்கவேல் தலைமையில் 3 டிஎஸ்பிகள், 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 150 போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனையடுத்து காலை 9 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகள் தங்கள் வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X