உதயநிதி காலில் விழுந்த மேயர்திராவிட மாடலா என மாஜி கேலி| Dinamalar

உதயநிதி காலில் விழுந்த மேயர்திராவிட மாடலா என 'மாஜி' கேலி

Added : ஜூன் 30, 2022 | |
மதுரை: ''தஞ்சாவூரில், மேயர் அங்கியுடன் உதயநிதி காலில் விழுவது தான் திராவிட மாடலா?'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.மதுரையில், அவர் நேற்று கூறியதாவது:திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக, அ.தி.மு.க., உள்ளது. எங்களை வழிநடத்தி சென்ற ஜெயலலிதாவின் காலில் விழுந்து நாங்கள் வணங்கினோம். அதை, அப்போதைய எதிர்க்கட்சியினரான தி.மு.க.,வினர் கேலி,

மதுரை: ''தஞ்சாவூரில், மேயர் அங்கியுடன் உதயநிதி காலில் விழுவது தான் திராவிட மாடலா?'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

மதுரையில், அவர் நேற்று கூறியதாவது:திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக, அ.தி.மு.க., உள்ளது. எங்களை வழிநடத்தி சென்ற ஜெயலலிதாவின் காலில் விழுந்து நாங்கள் வணங்கினோம். அதை, அப்போதைய எதிர்க்கட்சியினரான தி.மு.க.,வினர் கேலி, நையாண்டி செய்தனர். ஆனால், இன்றைக்கு தி.மு.க.,வின் தன்மானம், சுயமரியாதை எங்கே போனது?தஞ்சாவூரில், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் காலில், மேயர், அங்கியுடன் விழுந்து உள்ளார். 'காலில் விழுவதை சுயமரியாதை இல்லை' என்று விமர்சித்த தி.மு.க., இதற்கு என்ன சொல்லப் போகிறது? இந்த புது கலாசாரம் தான் திராவிட மாடலா? இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X