சே..என்ன மனுசன்யா..! பில்கேட்ஸை புகழ்ந்து தள்ளிய மகேஷ் பாபு..!

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
அமெரிக்கா சென்றுள்ள நடிகர் மகேஷ் பாபு, தனது மனைவியுடன், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில், 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக படத்தில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக கலக்கி வருபவர் மகேஷ் பாபு. தற்போது கோடை விடுமுறையை கழிக்க தனது மனைவி நம்ரதா ஷிரோத்கர், மகன் கவுதம், மகள் சித்தாரா
பில்கேட்ஸ்,மகேஷ்பாபு,நியூயார்க்,தொலைநோக்கு, சிந்தனையாளர்,டோலிவுட்


அமெரிக்கா சென்றுள்ள நடிகர் மகேஷ் பாபு, தனது மனைவியுடன், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூவலைதளங்களில் வைரலாகி வருகிறது.



தெலுங்கு சினிமா உலகில், 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக படத்தில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக கலக்கி வருபவர் மகேஷ் பாபு. தற்போது கோடை விடுமுறையை கழிக்க தனது மனைவி நம்ரதா ஷிரோத்கர், மகன் கவுதம், மகள் சித்தாரா என குடும்பத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி, இத்தாலியை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மகேஷ் பாபு சென்றுள்ளார்.


latest tamil news



அப்போது அங்குள்ள உணவகம் ஒன்றில், உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸை எதேச்சையாக சந்தித்துள்ளார். மகிழ்ச்சியில் திளைத்த மகேஷ்பாபு, பில்கேட்ஸ் உடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மகேஷ்பாபு, ”திரு.பில்கேட்ஸை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! உலகம் கண்ட மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர்...இன்னமும் மிகவும் அடக்கமானவர். உண்மையிலேயே ஒரு உத்வேகமாக திகழ்பவர்!! ”என பதிவிட்டுள்ளார்.

பில்கேட்ஸ் உடன் மகேஷ் பாபு எடுத்து கொண்ட புகைப்படம் இதுவரை சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குளை தாண்டியுள்ளது. மேலும் அவரது எளிமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X