தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்த உத்தரவு| Dinamalar

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்த உத்தரவு

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (4) | |
சென்னை: அரசு பள்ளிகளில் 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கடந்த வாரம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி நிர்வாக குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்வதாக பள்ளிக்கல்வித்துறைக்கு
தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்த உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கடந்த வாரம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி நிர்வாக குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்வதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, உடனடியாக தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமன பணிகளை நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X