இந்தியர்கள் மத்தியில் புகழ்பெறும் மேலைநாட்டு இசைக் கருவி செலோ

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
இசை மற்றும் இசைக் கருவிகளுக்கு உலக வரலாற்றில் முக்கியப் பங்குண்டு. இசை ஆளுமைகள் பலர் பல நூறு ஆண்டுகளால பல்வேறு இசைக் கருவிகளை இசைத்து வந்துள்ளனர். ஒவ்வொரு நாட்டு இசைக்கும் அடையாளமாகவும் அந்நாட்டு மக்களின் கலாசார பிரதிபலிப்பாகவும் விளங்குபவை இசைக் கருவிகள். ஆப்ரிக்கர்களுக்கு பாங்கோ டிரம்ஸ், இங்கிலாந்து நாட்டவருக்கு வயலின், பியானோ, இந்தியர்களுக்கு வீணை, சித்தார்,
செலோ, இந்தியாவில் செலோ, யோ யோ மா செலோ, செலோ வாத்தியம், cello, indian cello, yo yo ma

இசை மற்றும் இசைக் கருவிகளுக்கு உலக வரலாற்றில் முக்கியப் பங்குண்டு. இசை ஆளுமைகள் பலர் பல நூறு ஆண்டுகளால பல்வேறு இசைக் கருவிகளை இசைத்து வந்துள்ளனர். ஒவ்வொரு நாட்டு இசைக்கும் அடையாளமாகவும் அந்நாட்டு மக்களின் கலாசார பிரதிபலிப்பாகவும் விளங்குபவை இசைக் கருவிகள். ஆப்ரிக்கர்களுக்கு பாங்கோ டிரம்ஸ், இங்கிலாந்து நாட்டவருக்கு வயலின், பியானோ, இந்தியர்களுக்கு வீணை, சித்தார், இஸ்லாமிய நாடுகளில் ஷெனாய், அமெரிக்கர்களுக்கு ஹார்ப் என இசைக்கருவிகள் தொன்று தொட்டு உலக குடிமக்களின் ரசனை மற்றும் கலை சாதனைகளை பறைசாற்றி வருகின்றன. இந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற செலோ என்கிற இசைக் கருவி சமீப காலங்களில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் புகழ் பெறத் துவங்கியுள்ளது. செலோ குறித்த முக்கிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.


latest tamil news




*ஐரோப்பிய நாடான இத்தாலியில் 15-ம் நூற்றாண்டில் கண்டிபிடிக்கப்பட்ட இசைக்கருவி செலோ. வயோலா டீ பிராஸியோ என அழைக்கப்பட்ட இந்த இசைக்கருவி வயலின் குடும்பத்தைச் சேர்ந்தது.

*வயலின் குடும்பத்தில் வயலின், வயோலா, செலோ, டபிள் பாஸ் ஆகிய இசைக்கருவிகள் உள்ளன.

*உலோக கம்பி அல்லது ஆட்டு நரம்பில் ரோஸின் தடவிய குதிரை வால் முடி கற்றையை வைத்து தேய்க்கும்போது இதில் இனிமையான இசை பிறக்கும்.

*சிம்பனி இசைக் கச்சேரியில் இடம்பெறும் மூன்றாம் அடுக்கு இசைக்கருவியான செலோ, பேஸ் வாத்தியங்களில் முக்கியமானது. பெரும்பாலும் வேகம் குறைவான சோக இசையை இசைக்க செலோ, டபுள் பாஸ் பயன்படுத்தப்படும்.


latest tamil news




*சீனாவை பூர்வீகமாகக் கொண்ட பிரபல அமெரிக்க செலோ கலைஞர் யோ யோ மா வருகைக்குப் பின்னர் செலோ 1950களில் உலகப் புகழ் பெறத் துவங்கியது.

*வயலின் குடும்பத்தில் வயலினை அடுத்து பல நாடுகளில் செலோ இசைக்கப்பட்டது. குறிப்பாக திரைப் பின்னணி இசையில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.

*இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கேற்ப இந்திய செலோவை வடிவமைத்தார் ஐரோப்பிய செலோ கலைஞரான
சஸ்கியா ராவ் டீ ஹாஸ். இதனால் தற்போது இந்தியாவில் செலோ கற்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

*வயலின்போல பல்வேறு இடங்களுக்கு செலோவை எளிதில் தூக்கிச் செல்ல முடியாது என்கிற ஒரே பின்னடைவைத் தவிர்த்துப் பார்த்தால் செலோ சிறார்கள் கற்ற ஏற்ற இசைக்கருவியாகத் திகழ்கிறது.

*பெரிய சைஸ் வயலின்போல உள்ள செலோ மனிதர்களின் பல்வேறு உணர்வுகளை தத்ரூபமாக வெளிக்கொணர்வதில் முக்கிய இசைக்கருவியாகத் திகழ்கிறது.


latest tamil news




*இருபத்து ஐந்தாயிரம் ஆரம்ப விலையில் கிடைக்கும் மாணவர்கள் பயிலும் செலோ, கல்கத்தாவில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. செலோ கலைஞர்கள் வாசிக்கும் வெளிநாடுகளில் தயாராகும் செலோவின் விலை இரண்டு லட்சத்துக்குமேல் செல்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X