நாகர்கோவில் காசியிடம் ஆபாச வீடியோக்கள்: நீதிமன்றம் அதிர்ச்சி

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மதுரை: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் 120க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி என்பவரை கடந்த 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை, கந்துவட்டி வழக்கு என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் ஆவணங்களை
நாகர்கோவில் காசியிடம் ஆபாச வீடியோக்கள்: நீதிமன்றம் அதிர்ச்சி

மதுரை: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் 120க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி என்பவரை கடந்த 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை, கந்துவட்டி வழக்கு என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் ஆவணங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.

அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, காசி லேப்டாப், மொபைலில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது.காசியிடம் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக கூறியுள்ளனர்.120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர்.
இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
30-ஜூன்-202219:40:28 IST Report Abuse
Darmavan நம் நீதித்துறை குற்றவாளிகளுக்கு கரிசனம் காட்டும் .பாதிக்கப்பட்டவணை வாட்டும்.
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
30-ஜூன்-202219:25:32 IST Report Abuse
rsudarsan lic இவனை வைத்து பத்து தமிழ்ப்படம் வரும். உண்மையில் இவன் ஊர்ஊராக கல்லடி பட்டு சாக வேண்டியவன்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
30-ஜூன்-202218:17:16 IST Report Abuse
Girija என்கவுன்ட்டர் தான் ஒரே தீர்வு, பெண்கள் பிற்காலத்தில் போலீஸ் தொந்திராவுக்கு ஆளாகவேண்டும் என்பதால் புகார் செய்ய மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X