அதிகாரம்தான் சிவசேனாவிற்காக பிறந்தது: சஞ்சய் ராவத்

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
மும்பை: ‛சிவசேனா அதிகாரத்திற்காக பிறக்கவில்லை, அதிகாரம்தான் சிவசேனாவிற்காக பிறந்ததாக' சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டது செல்லும் என, உச்ச நீதிமன்றம் நேற்றிரவு தீர்ப்பளித்தது. இதையடுத்து,
ShivSena, Power, Sanjay Raut, சிவசேனா, அதிகாரம், சஞ்சய் ராவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: ‛சிவசேனா அதிகாரத்திற்காக பிறக்கவில்லை, அதிகாரம்தான் சிவசேனாவிற்காக பிறந்ததாக' சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டது செல்லும் என, உச்ச நீதிமன்றம் நேற்றிரவு தீர்ப்பளித்தது. இதையடுத்து, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியை தவிர்க்கும் நோக்கில், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். இந்த நிகழ்வு தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:


latest tamil news


முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தபோது அனைவரும் உணர்ச்சிவசப்பட்டோம். உத்தவ் தாக்கரே மீது அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளோம். அனைத்து மதம், ஜாதி மக்கள் உத்தவ் தாக்கரேவை ஆதரிக்கின்றனர். சோனியாவும், சரத் பவாரும் உத்தவ் தாக்கரே மீது நம்பிக்கை வைத்தனர். சிவசேனா அதிகாரத்திற்காக பிறக்கவில்லை, அதிகாரம்தான் சிவசேனாவிற்காக பிறந்தது. இதுதான் எப்போதும் பால் தாக்கரேவின் மந்திரம். மீண்டும் தனித்து செயல்பட்டு ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
30-ஜூன்-202220:05:31 IST Report Abuse
Viswam பட்னவீஸ் எங்களுக்கு ஆப்பு வைக்கல, ஆப்பை நாங்களே எடுத்து சொருவிக்கிட்டோம்ன்னு இதுக்கு அர்த்தம்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
30-ஜூன்-202219:51:48 IST Report Abuse
Duruvesan பாஸ் அடுத்து dmk vaa இல்ல tmc யா? தீயமுக mlakal admk வில் ஐக்கியம் ஆவது நடக்கும்
Rate this:
Cancel
30-ஜூன்-202218:26:21 IST Report Abuse
Gopalakrishnan S குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X