முதல்வர் ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு: ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு கோரினார்

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார் யஷ்வந்த் சின்ஹா. மேலும், திமுக கூட்டணி கட்சியினரிடமும் ஆதரவு கோரினார்.வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர்
Yashwant Sinha, Meets, TamilnaduCM, Stalin, Presidential Poll, யஷ்வந்த் சின்ஹா, ஜனாதிபதி தேர்தல், முதல்வர், ஸ்டாலின், சந்திப்பு, ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார் யஷ்வந்த் சின்ஹா. மேலும், திமுக கூட்டணி கட்சியினரிடமும் ஆதரவு கோரினார்.

வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்தலைவராக இருந்த சின்ஹா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி வேட்பாளர்கள் தத்தமது கூட்டணி கட்சி தலைவர்களிடம் நேரில் சென்று ஆதரவு கோரி வருகின்றனர்.


latest tamil news


அந்த வகையில் சென்னை வந்துள்ள யஷ்வந்த் சின்ஹா, திமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்றார். தொடர்ந்து, திமுக.,வின் கூட்டணி கட்சியிடமும் ஆதரவு கோரினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALU - HOSUR,இந்தியா
30-ஜூன்-202220:33:06 IST Report Abuse
BALU மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் அரசியல் கோமாளிகள்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
30-ஜூன்-202220:32:42 IST Report Abuse
Soumya யஸ்வந்த் சின்ஹா ஐயா வந்ததே வந்தீங்க இந்தியாவின் வருங்கால டம்மி பிரதமகராக கனவு காணும் நம்பிள் ஐயாவையும் வாழ்த்திட்டு போங்கய்யா
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
30-ஜூன்-202219:47:54 IST Report Abuse
Duruvesan பாஸ், விடியல் சார் பட்டியல் இனம், சமுக நீதி, திராவிட மாடல், அப்டின்னு மேடைக்கு மேடை உருட்டுவாரு, ஆனால் எப்போதும் ஆரிய பார்ப்பனனுக்கு மட்டுமே ஆதரவு என கட்டுஸ் கொள்கையில் உறுதி உள்ளவர். ஓட்டு போட்ட ஹிந்து அடிமைகளுக்கு நன்றி
Rate this:
Soumya - Trichy,இந்தியா
30-ஜூன்-202221:11:28 IST Report Abuse
Soumyaஹாஹாஹா துண்டுசீட்ட தப்பா எழுதி குடுத்திருப்பானுங்களோ ஹீஹீஹீ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X