அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்: ஐ.நா.,

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
நியூயார்க் 'அனைத்து மதங்களையும் மதித்து நடந்தால், வெவ்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்பவரை, ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர், கழுத்தறுத்து கொலை செய்து, அதை 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு
அனைத்து, மதங்களையும், மதிக்க, வேண்டும், ஐ.நா.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியூயார்க் 'அனைத்து மதங்களையும் மதித்து நடந்தால், வெவ்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்பவரை, ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர், கழுத்தறுத்து கொலை செய்து, அதை 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
இது பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட, 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது சுபைர் கைது குறித்தும், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:உலகம் முழுதும், அனைத்து மதங்களையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம். இதனால், அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழலாம்.

அத்தகைய சமூகம் உருவாகும் என, ஐ.நா., நம்புகிறது. கருத்து தெரிவிப்பது மக்களின் அடிப்படை உரிமை. தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பது, பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமை. மக்கள் பரஸ்பரம் பிற மதத்தினரையும், சமூகத்தினரையும் மதிக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும், மிக முக்கியமானவை ஆகும்.இவ்வாறு, அவர் கூறினார்..

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
30-ஜூன்-202221:39:30 IST Report Abuse
J. G. Muthuraj மதத்தின் பெயரால் ஒரு சமுதாயம் ஒன்னொரு சமுதாயத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை....மிதிக்க வேண்டாம்....
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
30-ஜூன்-202221:36:11 IST Report Abuse
a natanasabapathy Un is a useless organization. Can this fellow go to Iran iraq syria afganisthan and pakisthan and say this. Minorities are being ed in these countries but this thoothless tiger un is keeping it's mouth shut tightly out of fear.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
30-ஜூன்-202221:24:02 IST Report Abuse
Soumya ஐயா உலக அமைதி கருதி தயவு செய்து மூர்க்க மதத்தை தடை செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X