மஹா.,முதல்வர் ஆனார் ஏக்நாத் ஷிண்டே - துணை முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பு

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்ற சிவசேனா, பா.ஜ.,வை கழற்றி விட்டு கடைசி நேரத்தில் தேசியவாத காங்., காங்., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில
 Eknath Shinde takes oath as the ஏக்நாத் ஷிண்டே, முதல்வர், பட்னாவிஸ், Chief Minister of Maharashtra

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்டிரா புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார்.

மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்ற சிவசேனா, பா.ஜ.,வை கழற்றி விட்டு கடைசி நேரத்தில் தேசியவாத காங்., காங்., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கெடி தூக்கினர். இவர்களை சமரசப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தழுவியது. இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.


latest tamil newsஇந்நிலையில் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ், கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து, உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும், கடிதம் அளித்தார். இதையடுத்து, இன்றைய தினம் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டார்.


இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தொடர்ந்த வழக்கில், ஓட்டெடுப்பு நடத்த அனுமதி அளித்து நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை ஏற்ற உத்தவ் முதல்வர் பதவியை நேற்று இரவே ராஜினாமா செய்து கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ.,க்கள் , பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, தங்கள் தரப்பு ஆதரவு கடிதத்துடன் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இருவரும் கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினர். ஏக்நாத் ஷிண்டேயை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார். இதையடுத்து முதல்வராக ஏக் நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


இதன் மூலம் உத்தவ் தாக்கரேயை வைத்தே, அவரது கட்சியைச் சேர்ந்தவரை முதல்வராக பதவியேற்க வைத்த பா.ஜ.,வின் ராஜதந்திரம் அம்பலமாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan rajagopalan - Chennai,இந்தியா
01-ஜூலை-202201:04:59 IST Report Abuse
Kannan rajagopalan அசிங்கம் . சட்ட சபையை கலாய்த்து வராமல் கலைத்து தேர்தல் நடத்தி ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் .
Rate this:
Cancel
M.Selvam - Chennai/India,இந்தியா
30-ஜூன்-202221:32:50 IST Report Abuse
M.Selvam அரசியலில் விவஸ்தை எதிர்பார்த்தால் நாம் தான் வருத்த படனும்.. மக்களுக்கு உழைக்க எம்புட்டு ப்பாடு பட்டு ஊரு ஊராக ஸ்டார் ஹோட்டலில் சுற்றி ஒரு வழியாக .. நாடு முன்னேறு வது நல்லா தெரியுது...
Rate this:
Cancel
30-ஜூன்-202221:27:54 IST Report Abuse
kulandai kannan மராட்டிய கட்டு மரத்தின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்தது. 650 மாவட்டங்கள் உள்ள பாரத நாட்டில், வெறும் 4 மாவட்ட செல்வாக்கை மட்டும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஓட்டியதே, கடைந்தெடுத்த தகடு தத்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X