பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் லட்சுமாபுரம் ரேஷன் கடை

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருத்தணி:லட்சுமாபுரம் ரேஷன் கடைக்கு, இதுவரை சொந்த கட்டடம் இல்லாததால், பழுதடைந்த தனியார் வாடகை கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது.திருவாலங்காடு ஒன்றியம், லட்சுமாபுரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையில், மொத்தம், 420 அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர்.இந்நிலையில், ரேஷன் கடைக்கு
பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் லட்சுமாபுரம் ரேஷன் கடை

திருத்தணி:லட்சுமாபுரம் ரேஷன் கடைக்கு, இதுவரை சொந்த கட்டடம் இல்லாததால், பழுதடைந்த தனியார் வாடகை கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது.திருவாலங்காடு ஒன்றியம், லட்சுமாபுரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையில், மொத்தம், 420 அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர்.இந்நிலையில், ரேஷன் கடைக்கு இதுவரை சொந்த கட்டடம் இல்லாததால், வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.தற்போது, ரேஷன் கடை லட்சுமாபுரம் பெரிய தெருவில் பழுதடைந்த தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.மழை பெய்யும் போது, ரேஷன் கடையில் மழை நீர் ஒழுகி, அரிசி மூட்டைகள் மற்றும் ரேஷன் பொருட்கள் நனைந்து விடுகின்றன.
இதுதவிர கட்டடத்தின் உட்பகுதியிலும், கூரை சேதம் அடைந்துள்ளதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது.எனவே, ரேஷன் கடைக்கு சொந்தமாக, நிரந்தர கட்டடம் கட்டித் தர வேண்டும் என, கலெக்டரிடம், அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து திருவாலங்காடு ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விரைவில் லட்சுமாபுரத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், புதிய ரேஷன் கட்டடம் கட்டித் தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X