நாய் குறுக்கே வந்ததால் விபத்து மீடியனில் மோதி வாலிபர் பலி| Dinamalar

நாய் குறுக்கே வந்ததால் விபத்து 'மீடியனில்' மோதி வாலிபர் பலி

Added : ஜூன் 30, 2022 | |
மணவாள நகர்:மணவாள நகர் பகுதியில், நெடுஞ்சாலையில் நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் ஹோட்டல் மேலாளர், மீடியனில் மோதி இறந்தார்.திருவள்ளூர், குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 30. மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு, மனைவி நித்யாஸ்ரீ, 24, என்ற மனைவியும், எட்டு மாத பெண் குழந்தையும்

மணவாள நகர்:மணவாள நகர் பகுதியில், நெடுஞ்சாலையில் நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் ஹோட்டல் மேலாளர், மீடியனில் மோதி இறந்தார்.
திருவள்ளூர், குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 30. மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு, மனைவி நித்யாஸ்ரீ, 24, என்ற மனைவியும், எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு 12:15 மணிக்கு இரவு பணியை முடித்து, யமாஹா எப்.இசட்., இரு சக்கர வாகனத்தில் ராஜசேகர் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது நாய் குறுக்கே வந்ததால், இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி, மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது.இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தோர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ராஜசேகர் இறந்தார்.இது குறித்து, அவரது மனைவி நித்யாஸ்ரீ அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X