சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
முதல்வர் ஸ்டாலின்: அடுத்த ஐந்தாண்டு காலத்தில், மிகப்பெரிய மாற்றத்தை தமிழகம் பெறும். இதற்காகத் தான், உடல் சோர்வை பற்றிக்கூட கவலைப்படாமல், என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல; அனைத்து அமைச்சர்களும் அப்படித் தான் செயல்பட்டு வருகின்றனர். டவுட் தனபாலு: அட, ஏன் ரொம்பவும் சிரமப்படுறீங்க... உங்க கட்சியில எத்தனையோ துடிப்பான இளைஞர்கள் பலர்,


'டவுட்' தனபாலு

முதல்வர் ஸ்டாலின்: அடுத்த ஐந்தாண்டு காலத்தில், மிகப்பெரிய மாற்றத்தை தமிழகம் பெறும். இதற்காகத் தான், உடல் சோர்வை பற்றிக்கூட கவலைப்படாமல், என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல; அனைத்து அமைச்சர்களும் அப்படித் தான் செயல்பட்டு வருகின்றனர்.

டவுட் தனபாலு: அட, ஏன் ரொம்பவும் சிரமப்படுறீங்க... உங்க கட்சியில எத்தனையோ துடிப்பான இளைஞர்கள் பலர், எம்.எல்.ஏ.,க்களா இருக்காங்க... சோர்வுல இருக்கிற நீங்க, மற்ற சீனியர் அமைச்சர்கள் எல்லாம் பதவி விலகி, அவங்களிடம் பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு, அவங்களை வழிநடத்தும் வேலையை மட்டும் பார்த்தா என்னங்கிறது தான் எங்க, 'டவுட்!'

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: எங்களை வழிநடத்தி சென்ற ஜெயலலிதாவின் காலில் விழுந்து நாங்கள் வணங்கினோம். அதை, அப்போதைய எதிர்க்கட்சியினரான தி.மு.க.,வினர் கேலி, நையாண்டி செய்தனர். ஆனால், தஞ்சாவூரில், உதயநிதி காலில் மேயர் தன் அங்கியுடன் விழுந்து உள்ளார். 'காலில் விழுவது சுயமரியாதை இல்லை' என்று விமர்சித்த தி.மு.க., இதற்கு என்ன சொல்லப் போகிறது? இந்த புது கலாசாரம் தான் திராவிட மாடலா?

டவுட் தனபாலு: உங்களை யார் வழிநடத்தினாலும், தொபுக்கடீர்னு கால்ல விழுந்துடுவீங்களா...? அடுத்து, உங்களை எல்லாம் பழனிசாமி தான் வழிநடத்த இருக்கார்... அவர் கால்லயும் விழுவோம்கிறதை சொல்லாம சொல்றீங்களோன்னு தான், 'டவுட்' எழுது!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: 'அக்னிபத்' வீரர்களுக்கு மாநில அரசில் வேலை வாய்ப்பு அளிக்குமாறு மத்திய அரசு, எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

டவுட் தனபாலு: நாட்டுல பிரதமர் பதவி கனவோட இருக்கிற பல பேருல, நீங்களும் ஒருத்தர்... அப்படி இருக்கிறப்ப, தேசிய கண்ணோட்டம் இல்லாம, 'என் மாநிலம்; என் மக்கள்' என்ற குறுகிய மனப்பான்மையில் சிந்திப்பது சரியா என்பது தான் எங்க, 'டவுட்!'

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-202219:11:43 IST Report Abuse
Krishna வாய திறந்த எதாச்சும் பேச வேண்டியது. எதுக்கு சிரமம் பாக்கணும் நிறைய இளைஞர் பட்டாளம் நேர்மையா இருக்கு.. நீங்க ஓரமா போய் உக்காருங்க. திருட்டு தனம், சொத்து சேர்க்க ஆசைப்பட்டு வந்துட்டாரு. அப்புறம் இதுல கஷ்டபட்டு பண்றேனு பீதிக்குரீங்க
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
01-ஜூலை-202217:38:31 IST Report Abuse
Suppan ஆமாம் அந்த கோபால்சாமி கருணா காலில் புது விதமாக விழுந்தாரே அதையெல்லாம் .....
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஜூலை-202215:35:04 IST Report Abuse
D.Ambujavalli கண்டவர்களை நம்பினால் 'வர வேண்டியதை' ஒழுங்காக கொண்டு சேர்ப்பார்களா? இதிலெல்லாம் ' சிரமம் பார்க்காமல், உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் 'சேர்த்ததாக வேண்டிய' கட்டாயம் அரசியலில் யாரையும் நம்பக்கூடாது என்பதுதானே பாலபாடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X