ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இடது கை துண்டிப்பு

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:ஆம்புலன்ஸ் வாகனத்தில், வெளியில் கையை தொங்கவிட்டபடி சென்ற ஓட்டுனரின் இடது கை துண்டானது.கள்ளக்குறிச்சி மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார், 26; சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில், தனியார் ஆம்புலன்ஸ் நிறுவன ஓட்டுனர். இவருடன், சென்னையைச் சேர்ந்த சுரேஷ், 40, என்பவரும், ஓட்டுனராக வேலை செய்கிறார். இருவரும்,

செங்கல்பட்டு:ஆம்புலன்ஸ் வாகனத்தில், வெளியில் கையை தொங்கவிட்டபடி சென்ற ஓட்டுனரின் இடது கை துண்டானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார், 26; சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில், தனியார் ஆம்புலன்ஸ் நிறுவன ஓட்டுனர். இவருடன், சென்னையைச் சேர்ந்த சுரேஷ், 40, என்பவரும், ஓட்டுனராக வேலை செய்கிறார். இருவரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இறந்த ஒருவரின் சடலத்தை காரைக்காலுக்கு ஆம்புலன்சில் ஏற்றி சென்று, ஜூன் 28ம் தேதி, சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
வழியில், வாகனத்தை சுரேஷ் ஓட்டினார். அருண்குமார் பக்கத்து இருக்கையில் அமர்ந்து, ஒரு கையை மட்டும் வெளியில் தொங்கவிட்டு வந்தார். செங்கல்பட்டு அடுத்த பரனுார் சுங்கச்சாவடியை கடந்தபோது, எதிர்பாராத விதமாக, அடையாளம் தெரியாத லாரி ஒன்று, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒட்டி வேகமாக சென்றதில், அருண்குமாரின் இடது கை துண்டாகி சாலையில் விழுந்தது.ஓட்டுனர் சுரேஷ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அருண்குமாரை சேர்த்தார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக, சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, லாரியில் அடிபட்ட அருண்குமாரின் கையை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் முழுவதுமாக அகற்றினர். விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X