சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி:188 நாடுகளின் 343 அணிகள் பதிவு

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 188 நாடுகளின் 343 அணிகள் பங்கேற்க பதிவு செய்து உள்ளன.மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இம்மாதம் 28ல் துவங்கி, ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது.இப்போட்டி நடக்கும், மாமல்லபுரம் 'போர் பாயின்ட்ஸ்' விடுதியில், பொதுப்பணித் துறை, ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.மாமல்லபுரம் நகர் பகுதியில், பேரூராட்சி மற்றும்

மாமல்லபுரம்:சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 188 நாடுகளின் 343 அணிகள் பங்கேற்க பதிவு செய்து உள்ளன.
மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இம்மாதம் 28ல் துவங்கி, ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது.இப்போட்டி நடக்கும், மாமல்லபுரம் 'போர் பாயின்ட்ஸ்' விடுதியில், பொதுப்பணித் துறை, ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.மாமல்லபுரம் நகர் பகுதியில், பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைகள், மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளன.
சர்வதேச செஸ் வீரர்கள் தங்க, மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.போட்டியில் சர்வதேச நாடுகளின் செஸ் அணிகள் பங்கேற்க, கடந்த மாதம் பதிவு துவக்கப்பட்டு, ஜூன் 28ல் பதிவு முடிந்தது.

இதுகுறித்து, அரசுத் துறையினர் கூறியதாவது:சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு, 188 நாடுகளிலிருந்து 343 அணிகள் பங்கேற்க பதிந்து உள்ளன.ஓர் அணியில், ஆண்கள் குழு, பெண்கள் குழு என, குழுவிற்கு ஐந்து பேர், குழுவிற்கு ஒரு தலைவர், இரு குழுக்கள் ஒருங்கிணைத்து ஒரு தலைவர் என, ஒரு அணியில் 13 பேர் இடம் பெறுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X