அரசு பள்ளிகளில் அறிவியல் மையங்கள்:அணுமின் நிலையம் ஏற்பாடு

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:அரசு மேல் நிலைப் பள்ளிகளில், 16.50 லட்சம் ரூபாய் மதிப்பில், அறிவியல் மையங்களை சென்னை அணுமின் நிலையம் அமைக்கிறது.கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலையம், பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில், அரசு பள்ளிகளில், வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம் உள்ளிட்டவற்றை அமைத்து தருகிறது.அந்த வகையில் புதுப்பட்டினம் அரசு மேல்நிலை, திருக்கழுக்குன்றம்அரசு ஆண்கள் மேல்நிலை,
அரசு பள்ளிகளில் அறிவியல் மையங்கள்:அணுமின் நிலையம் ஏற்பாடு

மாமல்லபுரம்:அரசு மேல் நிலைப் பள்ளிகளில், 16.50 லட்சம் ரூபாய் மதிப்பில், அறிவியல் மையங்களை சென்னை அணுமின் நிலையம் அமைக்கிறது.
கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலையம், பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில், அரசு பள்ளிகளில், வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம் உள்ளிட்டவற்றை அமைத்து தருகிறது.அந்த வகையில் புதுப்பட்டினம் அரசு மேல்நிலை, திருக்கழுக்குன்றம்அரசு ஆண்கள் மேல்நிலை, நெரும்பூர் ஆதிதிராவிடர் மேல்நிலை ஆகிய பள்ளிகளில், அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் அறிய, 16.50 லட்சம் ரூபாய் மதிப்பில், அறிவியல் உபகரணங்களுடன், அறிவியல் மையம் அமைக்கிறது.
புதுப்பட்டினம் பள்ளியில் நடந்து வந்த அறிவியல் மைய பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நிலைய இயக்குனர் பலராமமூர்த்தி, நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.முதன்மை கண்காணிப்பாளர், சமூக பொறுப்புக்குழு உறுப்பினர் செயலர், பள்ளி தலைமையாசிரியை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


80 வகை கருவிகள்

அறிவியல் மையம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:அறிவியல் மையத்தில், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயில்வோர் பயன்பெறுவர். இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை, புத்தகத்தில் அல்லது கணினியில் வாசித்து அறிவது நடைமுறை.தற்போதைய நடைமுறையாக, 'சயின்ஸ் டெக்னாலஜி இன்ஜினியரிங் மேத்ஸ்' என்பதை ஒருங்கிணைத்து, 'ஸ்டெம்' என்ற செயல்முறை கற்றல் அறிமுகமாகியுள்ளது.

இயற்பியல், உயிரியல், கணிதம் எளிதாக புரிவதற்காக, 80 வகை கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பிதாகரஸ் தேற்றம், நியூட்டன் விதிகள், ஒளி விலகல், பிரதிபலிப்பு உள்ளிட்டவற்றை, கருவிகள் மூலம் எளிதாக பாடம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X