போலீஸ் பெயரில் வழிப்பறி பாண்டி பஜாரில் துணிகரம்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை பாண்டி பஜார் காவல் நிலைய எல்லையில், நள்ளிரவில் போலீஸ் எனக் கூறிய மர்ம நபர்கள், வட மாநில வாலிபர்களிடம் பணம் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரும்பாக்கத்தை சேர்ந்த வட மாநில இளைஞர்கள் மூன்று பேர், ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும்

சென்னை:சென்னை பாண்டி பஜார் காவல் நிலைய எல்லையில், நள்ளிரவில் போலீஸ் எனக் கூறிய மர்ம நபர்கள், வட மாநில வாலிபர்களிடம் பணம் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரும்பாக்கத்தை சேர்ந்த வட மாநில இளைஞர்கள் மூன்று பேர், ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பு வழியாக நடந்து சென்றனர்.அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், தங்களை போலீஸ் எனக் கூறி, வட மாநில இளைஞர்களிடம் சோதனை மேற்கொண்டனர். பின் அவர்களிடம் இருந்த 7,000 ரூபாயை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இளைஞர்கள், சம்பவம் குறித்து, பாண்டி பஜார் காவல் நிலையத்தில், வாய் மொழியாக தகவல் தெரிவித்து விட்டு சென்றனர். முறைப்படி புகார் அளிப்பதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் மற்றும் குழப்பம் காரணமாக, பாதிக்கப்பட்ட நபர்கள் வெறும் வாய்மொழி தகவலுடன் காவல் நிலையத்திலிருந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பாண்டி பஜார் காவல் நிலையத்தில், சட்டம் -- ஒழுங்கு ஆய்வாளர் இடம் காலியாக உள்ளதால், இங்கு புகார் செய்ய வருவோர் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. முறையான புகார் பதிவு செய்யப்படாததால், சம்பவம் குறித்து விசாரிப்பதில் சிக்கல் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X