குப்பை பிரச்னைக்கு தீர்வு எப்போது?கூட்டத்தில் கவுன்சிலர்கள் அதிருப்தி!

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் சகிலா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் யமுனா முன்னிலை வகித்தார். பிறப்பு, இறப்பு, வரவு, செலவு, வரி வசூல், ஒப்புதல்கள் உட்பட, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதை தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக, கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில், குப்பையை கையாள்வதில்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் சகிலா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் யமுனா முன்னிலை வகித்தார். பிறப்பு, இறப்பு, வரவு, செலவு, வரி வசூல், ஒப்புதல்கள் உட்பட, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதை தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக, கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில், குப்பையை கையாள்வதில் தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதால், சுகாதாரம், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.குப்பை மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
அதற்கு செயல் அலுவலர் யமுனா கூறுகையில், 'ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில், ௫ ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'முறையான அனுமதி கிடைத்தவுடன், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுப்படுத்தி குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என கூறினார்.
கவுன்சிலர்களின் கோரிக் கை விபரம்:
ரவி, - அ.தி.மு.க.,: திருமண மண்டபங்களில் உள்ள பார்க்கிங் பகுதியையும், விழாவிற்கு பயன்படுத்தப்படுவதால், வாகனங்கள் அனைத்தும் ரெட்டம்பேடு சாலை ஓரம் நிறுத்தப் படுகின்றனர். இதனால், திருமண நாட்களில், ரெட்டம்பேடு சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து, மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மண்டப உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும்.
அப்துல் கரீம், சுயேச்சை:கும்மிடிப்பூண்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒதுக்குபுறமான இடத்தில் இயங்குவதால், பல்வேறு இன்னலுக்கு மாணவியர் ஆளாகின்றனர். பள்ளி நேரத்தில், பள்ளி அமைந்துள்ள பகுதி மட்டுமின்றி, ரெட்டம்பேடு சாலை சந்திப்பு, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் நியமித்து முறையாக கண்காணித்து மாணவியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் யமுனா தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X