ரூ.6,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:பட்டா பெயர் மாற்றம் செய்ய 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், 50, இவர் ஸ்ரீபெரும்புதுார் தாலுக்கா குணகரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். குணகரம்பாக்கம் அடுத்த ஓ.எம்., மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விடுமுறையில் உள்ளதால், அந்த
ரூ.6,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

ஸ்ரீபெரும்புதுார்:பட்டா பெயர் மாற்றம் செய்ய 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், 50, இவர் ஸ்ரீபெரும்புதுார் தாலுக்கா குணகரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். குணகரம்பாக்கம் அடுத்த ஓ.எம்., மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விடுமுறையில் உள்ளதால், அந்த பொறுப்பையும் கூடுதலாக உதயகுமார் கவனித்து வந்தார்.
இந்நிலையில், ஓ.எம்., மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 24. இவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி ஸ்ரீபெரும்புதுார் தாலுக்கா அலுவலகத்தில் ஜூன் மாதம் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்திருந்தார்.இந்த மனு மீது, விசாரணைக்காக கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், தினேஷை அழைத்தார்.

அப்போது 6,000 ரூபாய் பணம் கொடுத்தால், பட்டா பெயர் மாற்றம் பணிகளை விரைந்து முடித்து கொடுப்பதாக உதயகுமார் கூறியுள்ளார்.தினேஷ், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ரசாயனம் தடவிய 6,000 ரூபாயை தினேஷிடம் கொடுத்து அனுப்பினர்.
நேற்று தினேஷிடம் இருந்து, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் 6,000 ரூபாயை வாங்கிய போது, அவரது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதயகுமாரை பிடித்தனர். விசாரணைக்கு பின் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X