அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச நாப்கின்கள் கொட்டி எரிப்பு

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:எழிச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வளர் இளம் பெண்களுக்கு அரசு வழங்கிய இலவச நாப்கின்களை மொத்தமாக கொட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வளர் இளம் பெண்களுக்கு அரசு சார்பில் சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்களில் வளர் இளம் பெண்கள் பெற்று பயனடைந்து
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச நாப்கின்கள் கொட்டி எரிப்பு

ஸ்ரீபெரும்புதுார்:எழிச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வளர் இளம் பெண்களுக்கு அரசு வழங்கிய இலவச நாப்கின்களை மொத்தமாக கொட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளர் இளம் பெண்களுக்கு அரசு சார்பில் சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்களில் வளர் இளம் பெண்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம் எழிச்சூர் ஊராட்சியில் அமைந்து உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், வளர் இளம் பெண்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நாப்கின்களை கொட்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.அரசு வழங்கிய நாப்கின்களை வளர் இளம் பெண்களுக்கு முறையாக வழங்காமல் அவற்றை காலம் தாழ்த்தி, தீ வைத்து எரிக்கப்படுவதை பார்த்த பொதுமக்கள் வேதனை அடைந்தனர். சம்பந்தப் பட்ட மருத்துவ அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X