'கல்யாண மாலை' சார்பில் பிரமாண்ட கண்காட்சி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை, :கல்யாண மாலை நடத்தும் இரண்டு நாள் பிரமாண்ட கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் நாளை துவங்குகிறது.திருமண சேவை துறையில், 22 ஆண்டு அனுபவம் உடைய 'கல்யாண மாலை' சார்பில், 'வெட்டிங் அண்டு பியாண்டு' எனும் தலைப்பில், இரண்டு நாள் பிரமாண்ட திருமண கண்காட்சி, சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நாளை துவங்குகிறது.முன்பதிவும் செய்யலாம்முதல் நாள் கண்காட்சியை மக்கள்
'கல்யாண மாலை' சார்பில் பிரமாண்ட கண்காட்சி

சென்னை, :கல்யாண மாலை நடத்தும் இரண்டு நாள் பிரமாண்ட கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் நாளை துவங்குகிறது.திருமண சேவை துறையில், 22 ஆண்டு அனுபவம் உடைய 'கல்யாண மாலை' சார்பில், 'வெட்டிங் அண்டு பியாண்டு' எனும் தலைப்பில், இரண்டு நாள் பிரமாண்ட திருமண கண்காட்சி, சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நாளை துவங்குகிறது.முன்பதிவும் செய்யலாம்முதல் நாள் கண்காட்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.இந்த கண்காட்சியில் 20,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளர்கள், திருமணம் குறித்த அனைத்து தகவல்கள், புரிதல்கள் மற்றும் அதற்கான முன்பதிவும் செய்யலாம்.200 அரங்குகள்கண்காட்சி குறித்து, கல்யாண மாலை மோகன், மீரா நாகராஜன் ஆகியோர் கூறியதாவது:திருமண வரவு - செலவு திட்டத்தை அமைப்பதில், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பிரமாண்டமாக செலவு செய்யவும் விரும்புகின்றனர். அதற்கான தளமாக இந்த கண்காட்சி அரங்குகள் விளங்கும்.கண்காட்சியில் இடம் பெற உள்ள, 200 அரங்குகளில், திருமண நகைகள், மணப்பெண் மற்றும் மணமகன் ஆடைகள், பொழுது போக்கு மற்றும் நடன அமைப்பு, நிகழ்வு திட்டமிடுபவர்கள், அலங்காரங்கள் உள்ளிட்டவை குறித்த அம்சங்கள் இடம் பெறும். தவிர, உணவு வகைகள், அழகுசாதனப் பொருட்கள், புகைப்படம் மற்றும் வீடியோ, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஒப்பனை கலைஞர்கள், திருமண அழைப்பிதழ்கள், வடிவமைப்புகள் இடம்பெறும். தேவைப்படுவோர் முன்பதிவும் செய்து கொள்ளலாம்.இந்திய திருமணத் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் நிபுணர்கள் மற்றும் பிராண்ட் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளலாம். கண்காட்சி முதல் நாள், விவாஹ பிரார்த்தனை, பேஷன் ஷோ நடக்கிறது.இரண்டாம் நாள், சமூக சந்திப்பு, பட்டி மன்றம் நடக்கிறது. நிறைவு விழாவில் கூட்டுறவுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X