காஞ்சி மாநகராட்சியில்'ஆல் பாஸ்' தீர்மானம்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் திருக்குறள் வாசித்து முடிந்ததும் அனைத்து தீர்மானங்களும் 'பாஸ்' என கூறி மேயர் புறப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர் மன்ற தீர்மான நகலை கிழித்தெறிந்து எதிர்ப்பு தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாநகராட்சி மாநகராட்சி கூட்டம் நேற்று மாலை நடந்தது. மேயர் மகாலட்சுமி தன் இருக்கையில் அமர்ந்ததும் உறுதி மொழி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் திருக்குறள் வாசித்து முடிந்ததும் அனைத்து தீர்மானங்களும் 'பாஸ்' என கூறி மேயர் புறப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர் மன்ற தீர்மான நகலை கிழித்தெறிந்து எதிர்ப்பு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மாநகராட்சி கூட்டம் நேற்று மாலை நடந்தது. மேயர் மகாலட்சுமி தன் இருக்கையில் அமர்ந்ததும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மேயர் திருக்குறள் படித்து முடித்தார்.தொடர்ந்து மூன்றாவது மண்டலத்தில் தேர்தல் நடப்பதால் அந்த வார்டுக்குரிய மன்ற பொருளை தவிர அனைத்தும் பாஸ் என கூறி எழுந்து சென்று விட்டார்.

கூட்டத்தில் 34 தீர்மானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பின் மாநகராட்சி கமிஷனர் நாராயணன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க., மாமன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் இருந்து வெளியில் சென்றனர்.இதை தொடர்ந்து 41 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சிந்தன், 'இதற்கு எதற்கு மாமன்ற கூட்டம் நடத்த வேண்டும்?' என கண்டனம் தெரிவித்து மன்ற தீர்மான நகலை கிழித்தெறிந்தார்.


இருவர் வாபஸ்

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்., மாதம் நடந்த போது, 36 வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த வார்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுபடி வரும் 9ம் தேதி அந்த வார்டுக்கு தேர்தல் நடக்கிறது. அந்த வார்டில் போட்டியிட மொத்தம் எட்டு பேர் மனு தாக்கல் செய்தனர். அதில், தி.மு.க., மாற்று வேட்பாளர் ராஜேந்திரன், பா.ஜ.,வை சேர்ந்த மதன்ராஜ் ஆகிய இருவர் நேற்று தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். மற்ற ஆறு பேர் களத்தில் உள்ளனர்.

கமிஷனர் இடமாற்றம்
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் புதிய கமிஷனரராக நாராயணன் கடந்த ஆண்டு நவ., மாதம் பொறுப்பேற்றார். மாநகராட்சி தேர்தலை நடத்தி முடித்தார். மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின், ஆளும் தி.மு.க., கவுன்சிலர்களுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியது.கமிஷனரை மாற்ற வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் முறையிட்டனர்.

இந்நிலையில் அவர், பெண்கள் மேம்பாட்டு நிறுவனம், சென்னைக்கு இடம் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுஉள்ளது. அவருக்கு பதில் கோவை நகரியல் பயிற்சி நிறுவன இயக்குனராக உள்ள கண்ணன், காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளதாக அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X