அண்ணாநகர் பணிமனை மெட்ரோகட்டுமான பணிகள் துவக்கம்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை :அண்ணாநகர் பணிமனை மெட்ரோ நிலையம் மற்றும் பாதை, அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மாதவரம் - சோழிங்கநல்லுார் புதிய மெட்ரோ பாதையில், நாதமுனி - திருமங்கலம் இடையே, அண்ணாநகர் பணிமனை மெட்ரோ நிலையம் கட்டப்பட உள்ளது.இந்நிலையம் மற்றும் பாதை கட்டுமான பணிக்கு, கடந்த மாதம் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கின.கட்டுமான பணி நடக்கும் சாலை மற்றும் நிலையம் கட்டும் இடங்களில்,
அண்ணாநகர் பணிமனை மெட்ரோகட்டுமான பணிகள் துவக்கம்



சென்னை :அண்ணாநகர் பணிமனை மெட்ரோ நிலையம் மற்றும் பாதை, அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மாதவரம் - சோழிங்கநல்லுார் புதிய மெட்ரோ பாதையில், நாதமுனி - திருமங்கலம் இடையே, அண்ணாநகர் பணிமனை மெட்ரோ நிலையம் கட்டப்பட உள்ளது.இந்நிலையம் மற்றும் பாதை கட்டுமான பணிக்கு, கடந்த மாதம் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கின.கட்டுமான பணி நடக்கும் சாலை மற்றும் நிலையம் கட்டும் இடங்களில், ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில், தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, நிலம் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் முடிந்ததையொட்டி, நிலையம் மற்றும் பாதைக்கு துாண்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. துாண்கள் அமைக்க, இரண்டு பிரமாண்ட இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, 100 அடி சாலையில் பள்ளம் தோண்டும் பணி முடிந்து, கட்டுமான பணி நடக்கிறது.சாலையில் அதிகமான போக்குவரத்து உள்ளதால், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல், இரவு நேரத்தில் இயந்திரங்களை இடம் மாற்றும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X