25 ஆயிரம் மரக்கன்று நடநடவடிக்கை

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை, :'மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக, 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்; தற்போது வரை, 11 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான கட்டுமான பணிக்காக, பல
25 ஆயிரம் மரக்கன்று நடநடவடிக்கை


சென்னை, :'மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக, 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்; தற்போது வரை, 11 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான கட்டுமான பணிக்காக, பல இடங்களில் மரங்கள் வெட்டி அகற்ற வேண்டிய நிலை உள்ளது. ஒரு மரம் அகற்றப்படும் போது, அதற்கு பதிலாக, 12 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டப்பணிகாக, 2,600 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.இம்மரங்களுக்கு பதிலாக, 25 இடங்களில், தற்போது வரை, 11 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மொத்தம் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X