மணிப்பூரில் நிலச்சரிவு: எட்டு பேர் பலி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
இம்பால்:மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ரயில்வே 'யார்டு' கட்டும் பணி நடக்கிறது. இங்கு, நேற்று பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு, பலர் வேலை பார்த்து வந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் காயம்
மணிப்பூரில் நிலச்சரிவு: எட்டு பேர் பலி

இம்பால்:மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ரயில்வே 'யார்டு' கட்டும் பணி நடக்கிறது. இங்கு, நேற்று பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு, பலர் வேலை பார்த்து வந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில், 50க்கும் மேற்பட்டோர்சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு, மாநில கவர்னர் இல.கணேசன் இரங்கல் தெரிவித்துஉள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X