சீக்ரெட் சிங்காரம்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
போராட்டம் நடக்குமா?கர்நாடகாவுல அடுத்த மாசம் முதல் தேதியில் இருந்து துப்புரவு தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தப்போறதா சொல்லி இருந்தாங்க. இதனால, கர்நாடகா முழுதும் துாய்மை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்த நேரத்துல நகர வளர்ச்சி அமைச்சரு துப்புரவு தொழிலாளர் சங்கத்தை



போராட்டம் நடக்குமா?

கர்நாடகாவுல அடுத்த மாசம் முதல் தேதியில் இருந்து துப்புரவு தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தப்போறதா சொல்லி இருந்தாங்க. இதனால, கர்நாடகா முழுதும் துாய்மை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்த நேரத்துல நகர வளர்ச்சி அமைச்சரு துப்புரவு தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களை அழைத்து பேச்சு நடத்தினாரு. அப்போது, அவங்களோட முக்கியமாக கோரிக்கையை நிறைவேத்த அமைச்சர் ஒப்புதல் கொடுத்தோட, அதிகாரிகளுக்கு உத்தரவும் போட்டிருக்காரு.இதுக்கு அப்புறமா போராட்டத்தை கைவிடும்படி சங்கத்துக்காரங்களுக்கு கோரிக்கை வச்சாரு. அதனால அமைச்சரின் கோரிக்கைளை ஏற்று போராட்டம் கைவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆதாரம் திரட்டல்!கர்நாடகாவுல அமைச்சர் முதல் அல்லக்கைகள் வரை 40 பர்சன்டேஜ் கமிஷன் கேட்பதா ஒப்பந்தாரர் சங்க தலைவரு போன வருஷம் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தாரு.இந்த விவகாரம் கர்நாடக அரசியல்ல புயலை கிளப்பிச்சி. ஒரு ஒப்பந்ததாரரின் உயிரை பறிச்சி இருக்கு. அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டிருக்கு. ஒரு வருஷத்துக்கு அப்புறம் பிரதமர் அலுவலகத்துல இருந்து இது சம்பந்தமா ஆதாரம் திரட்ட ஆரம்பிச்சி இருக்காங்க.இது, ஆளுங்கட்சி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கு. ஊழல் பண்ணவங்க யார் யாருன்னு கண்டுபிடிச்சி அவங்க மேல நடவடிக்கை எடுக்கத்தான் இந்த ஆதாரம் திரட்டும் வேலைகள் நடக்குதுன்னு சொல்லப்படுது.தேர்தலுக்கு முன்னால இந்த வேலையை செஞ்சா கட்சிக்கும் நல்ல பேர் கிடைக்கும். ஓட்டுகளும் சிதறாதுன்னு டில்லி நம்புது. அதன்படி யார் யார் மாட்டுவர் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு.ஒன்றாக்கும் முயற்சி!கர்நாடகாவுல இதுக்கு முன்ன ஒரே ஒரு விவசாய சங்கம் தான் இருந்ததாம். காலப்போக்கில் பல பிரிவுகளாக பிரிஞ்சி கிடக்காம். இதனால விவசாயிகள் இடையே ஒற்றுமை இல்லாத நிலைமை இருக்கு.எந்த கோரிக்கையை வலியுறுத்தியும் பலமான போராட்டம் நடத்த முடியாம இருக்குதாம். அதோடு கர்நாடகாவுல இருக்கிற அத்தனை விவசாய சங்கத்தையும் ஒன்றாக்கும் முயற்சி நடக்குதாம். இதுக்கான முயற்சியில மாநில அளவிலான விவசாய சங்க தலைவரு ஈடுபட்டு வர்றாராம். இனிமே விவசாயிகள் குரல் ஓங்கி ஒலிக்கும் முயற்சி தான் இதுன்னு அவரு சொல்லி இருக்காரு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X