மக்களின் வரிப்பணத்தில்எம்.எல்.ஏ.,க்கள் சுற்றுலா

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
பெங்களூரு-மக்களின் வரிப்பணத்தில், எம்.எல்.ஏ.,க்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.கர்நாடகா சட்டசபையின் நம்பிக்கைகள் கமிட்டி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ரகுபதி பட் தலைமையில், 15 எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் குடும்பத்துடன், ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக்குக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.பெங்களூரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை



பெங்களூரு-மக்களின் வரிப்பணத்தில், எம்.எல்.ஏ.,க்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.கர்நாடகா சட்டசபையின் நம்பிக்கைகள் கமிட்டி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ரகுபதி பட் தலைமையில், 15 எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் குடும்பத்துடன், ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக்குக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.பெங்களூரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை டில்லிக்கு புறப்பட்டனர். அங்கிருந்து லடாக் செல்கின்றனர். ஆய்வு பெயரில் இவர்கள், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.கமிட்டி உறுப்பினர்கள் எதைப் பற்றி ஆய்வு செய்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் ஜம்மு -- காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் ஜெனரலையும் சந்தித்து பேசியுள்ளனர். நம்பிக்கைகள் கமிட்டிக்கு, லெப்டினன்டை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன. மக்களின் வரிப்பணத்தில், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் குடும்பத்துடன் சுற்றுலா சென்றது சரியா என, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X