அரசு பொருட்காட்சியைகாண 'மாஸ்க்' கட்டாயம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
சிறை அணிவகுப்பு மைதானத்தில் நடந்து வரும், அரசு பொருட்காட்சியை காணவரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தொற்று பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை கலெக்டர் சமீரன் கூறியதாவது:கோவை, சிறை மைதானத்தில் கடந்த, 11ம் தேதி முதல் துவங்கிய அரசு பொருட்காட்சி, 45 நாட்கள் நடக்க உள்ளது. தற்போது வரை, 80 ஆயிரத்து, 237 பேர்

சிறை அணிவகுப்பு மைதானத்தில் நடந்து வரும், அரசு பொருட்காட்சியை காணவரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தொற்று பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை கலெக்டர் சமீரன் கூறியதாவது:கோவை, சிறை மைதானத்தில் கடந்த, 11ம் தேதி முதல் துவங்கிய அரசு பொருட்காட்சி, 45 நாட்கள் நடக்க உள்ளது.
தற்போது வரை, 80 ஆயிரத்து, 237 பேர் பார்வையிட்டுள்ளனர். இதனால், அரசுக்கு, 11 லட்சத்து, 36 ஆயிரம் ரூபாய் வருவாய் வரப்பெற்றுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, அரசு பொருட்காட்சியை காண வரும் பொதுமக்கள் அனைவரும் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின் பற்றி, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.அரசு வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் அனைவரும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தொற்று பரவலை தடுக்க, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X