தேயிலை பறிக்கும் பணிக்குசரக்கு வாகனத்தில் பயணம்

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறையில், சரக்கு வாகனத்தில் விதிமுறையை மீறி ஆட்களை அழைத்து செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரிலிருந்து, பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை பறிக்கும் பணிக்காக தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். சில எஸ்டேட்களில் மட்டும், தொழிலாளர்களை பாதுகாப்பான முறையில் வாகனத்தில் அழைத்து செல்கின்றனர்.பெரும்பாலான எஸ்டேட்களுக்கு, அந்தந்த எஸ்டேட்

வால்பாறை:வால்பாறையில், சரக்கு வாகனத்தில் விதிமுறையை மீறி ஆட்களை அழைத்து செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரிலிருந்து, பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை பறிக்கும் பணிக்காக தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். சில எஸ்டேட்களில் மட்டும், தொழிலாளர்களை பாதுகாப்பான முறையில் வாகனத்தில் அழைத்து செல்கின்றனர்.
பெரும்பாலான எஸ்டேட்களுக்கு, அந்தந்த எஸ்டேட் லாரிகளில் தொழிலாளர்களை தேயிலை பறிக்கும் பணிக்காக, பல கி.மீ., துாரம் மலைப்பாதையில் அழைத்து செல்கின்றனர்.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், ஆபத்தான பாதைகளில், லாரிகளில் தொழிலாளர்களை அழைத்து செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான எஸ்டேட் ரோடுகள், கரடு, முரடாக இருப்பதால், லாரியின் பின் பக்கம் தொழிலாளர்களை அழைத்து செல்வது பாதுகாப்பின்றி உள்ளது.இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் வால்பாறை நகருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் தொழிலாளர்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வருகின்றனர்.அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சரக்கு வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்து செல்வதை தடுக்க வேண்டும். பாதுகாப்பான வானங்களில் தொழிலாளர்களை அழைத்து செல்ல எஸ்டேட் நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X