நெ.10 முத்தூர் தலைவர் பதவிக்கு இருவர் போட்டி:4 ஊராட்சிகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு| Dinamalar

நெ.10 முத்தூர் தலைவர் பதவிக்கு இருவர் போட்டி:4 ஊராட்சிகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

Added : ஜூலை 01, 2022 | |
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஊராட்சிகளில் நடக்கும் இடைத்தேர்தலில், நான்கு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழக ஊரக உள்ளாட்சியான ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு, கடந்த மாதம், 20ம் தேதி மனு தாக்கல் துவங்கி, 27ம் தேதி வரை பெறப்பட்டது.நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனை முடிந்து, நேற்று, 30ம் தேதி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஊராட்சிகளில் நடக்கும் இடைத்தேர்தலில், நான்கு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழக ஊரக உள்ளாட்சியான ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு, கடந்த மாதம், 20ம் தேதி மனு தாக்கல் துவங்கி, 27ம் தேதி வரை பெறப்பட்டது.நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனை முடிந்து, நேற்று, 30ம் தேதி வேட்பு மனு வாபஸ் நடந்தது. வரும், 9ம் தேதி ஓட்டுப்பதிவும், 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சிங்காநல்லுார் ஊராட்சியில், 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, முருகன் என்பவர் மட்டுமே மனு தாக்கல் செய்ததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனைமலை ஒன்றியத்தில் வாழைக்கொம்புநாகூர் ஊராட்சியில், 2வது வார்டு உறுப்பினராக பிரவின்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் வடக்கிபாளையம் ஊராட்சியில், 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மூன்று பேர் மனு தாக்கல் செய்ததால், போட்டி நிலவுகிறது.கிணத்துக்கடவு ஒன்றியம் குருநெல்லிபாளையம் ஊராட்சி, 4வது வார்டுக்கு இரண்டு பேர் மனு தாக்கல் செய்து போட்டியிடுகின்றனர். நல்லட்டிபாளையம் ஊராட்சியில், 4வது வார்டுக்கு மூன்று பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இருவர் வாபஸ் பெற்று, சுரேஷ் என்பவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.சொக்கனுார் ஊராட்சியில், 1வது வார்டுக்கு அன்னக்கொடி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நெ.10 முத்துார் ஊராட்சி தலைவர் பதவிக்கு, நான்கு பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில், இருவர் மனுவை வாபஸ் பெற்ற நிலையில், சதீஸ்குமார், மஞ்சு சவுமியா இருவரிடையே போட்டி நிலவுகிறது.

குடிமங்கலத்தில் 3 வேட்பாளர்கள் களம்

உடுமலை: குடிமங்கலம் ஊராட்சி, 1வது வார்டு உறுப்பினர், உடல் நலக்குறைவால் இறந்ததையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஊராட்சி அலுவலகத்தில், வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.இதில், 3 மனுக்கள் பெறப்பட்டிருந்தது. மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு, நேற்று மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. யாரும் வாபஸ் பெறாத நிலையில், நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்படி, மகேஷ், பாப்புசாமி, பெரியசாமி ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். வரும், 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது என, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X